2022


 நட்புகளுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 


அடுத்த ஆண்டிலும் கொரோனாவின் ஆறாவது பிள்ளையான ஓமிக்ரான் நம்மை அடித்து , துவைத்து , டவுசரை கிழித்து ஓட வைத்து விடும்காலங்கள் மாறினாலும் கொரொனாமட்டும் மாறாது போல . 





இருந்தாலும் புது ஆண்டு பிறக்கப்போகிறது நல்லபடியாக இருக்கும் என்று நம்புவோம் .


2021 இல் எதையம் கிழிக்காவிட்டலும், 2022 இல் ஆவது ஏதாவது செய்வோம் .. 


எப்படியும் இந்த லிஸ்டிஸ் ஒன்றையும் முழுதாக செய்யப்போவதில்லை - இருந்தாலும்போடுவோம் #2022goals


1) உடல் பயிற்சி செய்ய முற்பட வேண்டும்😂


2) கோபத்தை குறைக்க வேண்டும் 


3) ஒரு நாலு சங்கி / உபி / தம்பிகளை கான்டாக்க வேண்டும்


4) நிறைய எழுத வேண்டும்எழுதியதை முடிக்க வேண்டும்  (இரண்டு புத்தகங்கள் லைனில்உள்ளன


5)  #பாரா வின் எழுதுதல் புத்தகத்தையும்கிரைம் அண்ட் பணிஷ்மெண்ட் #விஷ்ணுபுரம்நாவலையும் முடிக்க வேண்டும் 


6) தமிழகத்திற்கு உண்மையான விடியல் வேண்டும்


இதில் ஒன்று நடந்தாலே வெற்றி என்ற மணபக்குவம் வர வேண்டும்.


நடக்காவிட்டால் 2023 லிஸ்ட் ஒன்றை வெக்கமே இல்லாமல் போட வேண்டும் .. 


🙏🏼 


கொற்றவை

சங்கிகள் சூழ் உலகில் 

மங்கிகளுகெல்லம் விருந்து..




கடவுளே வந்து , 

நான் தான் கடவுள் என்றாலும்

காயடித்து அனுப்பும் உலகமிது..


மொட்டு பூவாகும் முன் 

கசக்கும்  உரிமை பெற்றவர்கள்  

குழந்தைகளே..


சுட்டெரிக்கும் சூரியனின்

கதிர்களை இழுத்து பிடித்து 

நெல்லை விளைவிக்கும் விவசாயிக்கு

 விலை சொல்பவன் வெயிலிலே

தலைகாட்டதவனாக தான் இருக்கிறான்..


பல்லில்லா பாட்டியின் 

சுருங்கிய சதையை 

பல் முளைக்கும் குழந்தை கடிக்க 

இருவருக்கும் சிரிப்பு..


பாவமரியா பிள்ளைகளுக்கு 

தொல்லை தருபவன் 

கடவுளாக இருந்தாலும் 

அவனுக்கு நரகம் தான்..  


காசு தான் முக்கியம் 

என்ற  மாசுபட்ட இதயத்தை 

திருத்த வந்த மருந்தே 

குழந்தை..


கரும்புகை கக்கிய காரிலிருந்து இறங்கி 

சுற்றுச்சூழலை காப்பது எப்படி 

என்று பேச ஆரம்பித்தார் 

அந்த மந்திரி 


குடிபோதையில் தாலியை அடகுவைத்த 

கணவனின் வம்சத்தை திட்டிக்கொண்டே , 

அவர்களை காப்பாற்றி விடுமாறு  

மாரியம்மனுக்கு முடிந்து வைத்தாள் தர்ம பத்தினி


விட்டமின் மாத்திரையை 

விழுங்கி விட்டு 

குண்டலினி சக்தியை எழுப்புவதாக

ஊரை ஏமாற்ற கிளம்பினார் அந்த சாமியார்..


என்னால் முடியவில்லை 

என்ற சமாச்சாரத்தை கூட

அதை செய்துவிட்டே

சொல்கிறாள் பெண்



அம்மா மறுக்க ,

வேண்டுமென குழந்தையழ

கடவுளின்  காலில்  

கொட்டியது  தேள்


பொங்கலுக்கு நாள் பத்திருக்க ,

ஓசியில் கிடைத்த மஞ்சப்பையை 

மாராப்பக்கினாள் மரகதம் 


நிலாபிரபுவின் மகளை காதலிக்க

தெரிந்து போய் அவர்கள் 

கை காலை எடுக்க

வழியில்லாமல் இவன் தவிக்க 

கட்டிக்கொண்ட மாப்பிள்ளையுடன்  மாட்டுவண்டியில் பட்டினம் கிளம்பினாள் 

கண்ணகி


------

ஹைக்கூ


பார்க ஒருவன் வரமாட்டான

என்று ஏக்கத்துடன் காத்திருந்தது 

முதியோர் இல்லம் 





 

மின்னல் முரளி - விமர்சனம்


மூஞ்சி புக்கில் எங்கு திரும்பினாலும் ராக்கி / மின்னல் முரளி பட பில்டப்புகள் தான். இதில் மின்னல் டைரக்டு ott ரிலீஸ் என்பதால் அதை ஆரம்பித்தேன் .





மலையாள சினிமாக்களின் மொழியே அலாதியானது . மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை அதனருகில் நின்று பார்க்கும் ஒரு சிறுகதையை போல எடுப்பார்கள் . தேவயே இல்லாத பில்டப்கள் கிடையாது . வழக்கமான க்ளிஷே இருக்காது. உதாரணமாக நம்மூர் ஆட்கள் பயன்படுத்தும் அரைத்த மாவு  க்ளிஷே   - காவல் நிலையத்தை காட்டும் காட்சி . கண்ணை மூடிக்கொண்டு யோசித்து பாருங்கள், என்ன காட்சி இருந்திருக்கும் என்று? 



ஒரு பையன் டீ எடுத்துக்கொண்டு போவான் . கேமரா அவனது டீ எடுத்து செல்லும் இடத்தில் இருக்கும் . ஒவ்வொரு டேபிளாக சென்று டீ கொடுத்து விட்டு,  ஒரு இடத்தில் முடியும் . அங்கே அடுத்த காட்சியோ அல்லது வசனமோ ஆரம்பிக்கும் . இதை போன்ற க்ளிஷே மலையாளத்தில் மிக மிக குறைவு. 


இதை தாண்டி இது ஒரு சூப்பர் ஹீரோ படம் வேறு. நம்மூரில் சுமார் உடம்பு ஹீரோக்களே அஞ்சு மீல்ஸ் சாப்பிடும் ரவுடிகளை அடித்து துவைப்பார்கள் (தனுஷ் நியாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பில்லை) . சற்றே திட காத்திரமான விஜயகாந்த் போன்றவர்கள் ஒரே அடியில் ஒன்பது பேரை வீழ்த்தும் சக்தி கொண்டவர்கள். ரஜினியை பற்றி சொல்லவே வேண்டாம். இங்கே நிலைமை இப்படி இருக்க , சேட்டன்கள் இந்த சப்ஜெக்டை எப்படி அனுகுவார்கள் என்ற ஆர்வத்தில் படத்தை ஆரம்பித்தேன் .


கதையின் படி ஹீரோ அமெரிக்கா  சென்று பணம் சம்பாதிக்க ஆசைபடுபவன். வில்லன் ஏனோ தானோ என்று வாழ்க்கையை ஒட்டுபவன். இவர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு காதல் தோல்வி. இப்படி நாட்கள் ஓட ஒரு மங்களகரமான சுப தினத்தில் அவர்களை மின்னல் தாக்க , அதிலிருந்து சூப்பர் பவர் கிடைக்க ஆரம்பிக்கிறது அந்த துவந்த யுத்தம் .


இந்த படம் எங்கே ஜெய்க்கிறது என்று யோசித்தால், சில பல காரணங்கள் தென்படலாம்.


முதலாவதாக , ஹீரோ/வில்லனுக்கான பின் கதைகள்.  


அடுத்து நடித்தவர்கள் - குறிப்பாக குரு சோமசுந்தரம். 


மூன்றாவதாக- யதார்த்தம் . சூப்பர் பவர் தான் இருக்கிறதே என்று ஒடும் டிரெயினை சுண்டு விரலால் நிப்பாட்டுவது, புல்லட் வண்டியை தூக்கி போட்டு விளையாடுவது போன்ற அக்கிரமங்களை யாரும் செய்யவில்லை.


இந்த படம் இவ்வளவு நன்றாக வரும் ஆகப்பெரும் காரணம் - குரு சோமசுந்தரம். ஆனால் அவரது கதா பாத்திரம் தான் படத்தின் பெரிய மைநசும் கூட.


ஸ்பாய்லர் கருத்து கொண்ட பாரா இது 


ஒரு தாயில்லா பையனை ஊரே ஒதுக்கி வைக்க , அவனுக்கு அன்பு காட்டுகிறாள் ஒரு தேவதை. இதனால் அவனுக்கு அந்த பெண்ணின் பால் ஒரு ஈர்ப்பு. காலங்கள் ஓட காட்சிகள் மாறுகிறது. அவளுக்கு திருமணம் ஆகி , கணவன் விட்டு ஓடிவிட அவள் ஊர் திரும்புகிறாள் . அதன்பிறகவாது இருவரும் சேர முடிந்ததா? இல்லை. ஊரார் விட வில்லை


அப்பொழுது அவனுக்கு எவ்வளவு கோவம் வந்திருக்க வேண்டும்? ஜகத்தை அழிக்க கிளம்புவானா மாட்டானா? அவன் பழிவாங்குதல் தானே மீதி கதையே? இந்த படத்தில் இப்படிபட்டவன் ஒரு வில்லன். 

அவன் என்ன தீங்கு செய்தாலும்  நமக்கு பரிதாபமே வருகிறது. இது தான் இந்த படத்தின் ஓசோன் சைஸ் பிரச்சினை. 


இந்த கதாபாத்திரத்தில் நடித்த சோமசுந்தரம் தேசிய விருதை புக் செய்து விட்டார். 


இதை தாண்டி படத்தின் கால கட்டம், யூகிக்க முடிந்த சில காட்சிகள் என்று இருந்தாலும் , முதல் இரண்டு மணிநேரத்திற்கு எந்த தொய்வும் இல்லாமலே செல்கிறது இந்த படம்.


அளவான கிராஃபிஸ், தேவையான ஏமோஷன்ஸ், வலுவான பிர்கதைகள் என்று இந்திய சூப்பர் ஹீரோ படங்களுக்கு ஒரு பெஞ்ச்மார்கை செட் செய்கிறது இந்த படம்.  ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை தருகிறது.


நம்மவர்கள் பார்த்து திருந்துவார்களா? 



குடைக்குள் நடை

டிசம்பரில் நிம்மதியாக ஒரு வாக்கிங் போக முடிகிறதா  இந்த ஊரில் . கால் மைல்  நடப்பதற்குள்  மழை துரத்துகிறது  . நாலு  மணிக்கே எழுந்து  போனாலும் கூடவே வந்து தொலைக்கிறது. வானிலை அறிக்கை எல்லாம் முடிக்கு சமானம் என்பது போல நடந்து கொள்கிறது.  மழை தரும் வருணன் மற்ற மாதங்களில் வேர்க்கடலை சாப்பிட்டு வேடிக்கை பார்ப்பான் போல.. டிசம்பரில் மட்டும், முதல் மாத மாப்பிள்ளை போல வெறியுடன் வெளுத்து வாங்குகிறான். அடுத்த ஆண்டு டிசம்பரில் மட்டும் மழை பெய்யாத இடத்திற்கு மாறுவது என்று மன டைரியில் குறித்துக்கொண்டேன்.



நல்ல வேலை இன்று வானம் பல்லை இளித்து காட்டியது. நேற்றோடு வாக்கிங் போகாமல் ஆறு நாட்கள் வேறு ஆகியிருந்தது .ஆறு மொக்கையான நாட்கள். என்னதான் அப்பார்ட்மெண்டின் உள்ளேயே நடந்தாலும் , பொது வெளியில் செல்வது போல வருமா? எவ்வளவு தான் வெறுத்தாலும், இந்த சுமாரான காற்றும் ,  புகை கக்கும் லாரிகளையும் பார்த்தால் தான் வாக்கிங் போகிற திருப்தி வருகிறது. மழை வந்து தொலைவதற்குள் கிளம்பிவிடலாம் என்று  முடிவெடுத்தேன்.சோமுவிற்கு தகவல் சொன்னேன்  . குடை சகிதமாக வண்டியை கிளப்பினேன்.


இத்தனைக்கும்  சென்னையில் சாலை ஓரத்தில்  நடந்து  போவது எமனோடு மூன்று சீட்டு ஆடுவதற்கு சமம்  . வண்டியே வராத பெசன்ட் நகரின் பீச்சிருக்கே தினமும் வாக்கிங் போக, நாம் என்ன அம்பானியா ? நமக்கு தோதுப்படும் கிண்டியின் குறுக்கு தெருக்களில் வாக்கிங் போகலாம். ஆனால் சில தெருக்களில் மூத்திர நாற்றம் அடிக்கும், மற்றவற்றில் வெறி நாய் துரத்தும் . இரண்டும் நமக்கு ஆகாது.  ஐந்து பர்லாங் தெரு வழியாக மூக்கை பிடிக்காமல் வேளச்சேரி ரோடு வருபவர்களுக்கு விருதே தரலாம். இதிலிருந்து தப்பிக்க வண்டியை எடுத்து வேளச்சேரி ஹண்ட்ரட் பீட் ரோடு வந்து , அங்கிருந்து  வாக்கிங் சம்பவத்தை ஆரம்பிப்பேன் . வாக்கிங் போவதற்கு வண்டியா என்று வாயை பிளக்க வேண்டாம்.  வண்டியில் போய், வாக்கிங் போகும் ஆட்கள் அதிகம் இருக்கும் நகரங்களில் சென்னைக்கு நிரந்தர இடம் எப்போதும் உண்டு. வேளச்சேரி வரவேற்றது. ஓரத்தில் இருந்த சித்தி விநாயகருக்கு எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு வணக்கத்தை போட்டு வைத்தேன். அப்படியே வண்டியை ஒரு ஓரத்தில் போட்டு நடக்க ஆரம்பித்தேன்.


இத்தனை தகிடு தத்தம் செய்து வாக்கிங் போக வேண்டுமா என்ற கேள்வி எழலாம். என்ன பண்ணி தொலைவது , எல்லாம் இந்த சுகருக்கு பயந்து செய்ய வேண்டியிருக்கிறது. 

நாற்பது வயதில் சுகர் இருப்பதாக சொன்னார்கள்  , அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து   நடக்க ஆரம்பித்தேன். இன்னும் முடிந்த பாடில்லை. ஒரு வாரம் நிப்பாட்டினால் இரண்டு புள்ளிகள் உயரும். உயிர் சமாச்சாரம், நடப்பதே சிறந்தது என்று அடுத்த வாரம் மறுபடியும் ஆரம்பிப்பேன்.  கணக்கெடுத்து பார்த்தல் , என்  அறுபது வருட வாழ்க்கையில் , எப்படியும்   நாலு வருடத்தை  வாக்கிங்கிற்கே தாரை வார்த்து கொடுத்திருப்பேன். சுகரும் குறையவில்லை, உடலும் வலுக்கவில்லை. வாங்கி வந்த வரம் போல. நடந்தே வேளச்சேரி ஏரியின் அருகே வந்திருந்தேன். பச்சை பசேல் என்று இருந்தது அந்த ஏரி . முழு கூவமாக ஆக்காமல் விட்டார்களே என்று மனதை தேற்றிக் கொண்டேன். 


சுகர் சிந்தனைகள் விடாமல் துரத்தியது. காரணம் கடைசி வரை நம்முடனே இருந்து,  கட்டை ஏறுவது , சுகர் போன்ற வியாதிகள் தான். அதனால், இவற்றை  ஒரு ஊடலுடன் அணுகுவது நல்லது என்றே தோன்றியது  . அப்பொழுது சட்டென்று சுகரெல்லாம் ஒரு  வியாதியே இல்லை என்று சோமு அனுப்பிய வீடியோ நியாபகம் வந்தது. ஒரு வாரம் மாத்திரை சாப்பிடாமல் அவன் சொன்னது போல செய்து பார்க்கலாமா  என்று தோன்றியது. ஆனால் அதற்கும் ஒரு நேரம் காலம் வேண்டாமா? நாலு மாதத்திற்கு முன்னால் தான், தம்பி பையன் கல்யாணத்தில் வெளுத்து வாங்கி . சுகர் அதிகமாகி, ஆஸ்பத்திரியில் அறுபத்தைந்தாயிரம் தண்டம் அழுது வெளி வந்தேன். 


ஐந்து நாட்களில் விட்டு விடுவார்கள் என்று பார்த்தால் , உடம்பில் பொட்டாசியம் இல்லை, சோடியம் இல்லை, மஞ்சள், குங்குமம் இல்லை என பதினைந்து நாட்களுக்கு வைத்து செய்து விட்டார்கள். அதுவரை அரை சர்க்கரையில் காபி போட்டு கொடுத்த அம்புஜம், அன்றோடு  அதையும் நிறுத்தினாள் . அதனால் சோமுவின் வீடியோவை முதலில் அவளுக்கு அனுப்பி, அவள் சரி என்றால் முயற்சி செய்யலாம்  என்று முடிவெடுத்தேன். மெதுவாக  திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டல் வாசலுக்கு வந்தடைந்தேன். இந்நேரம் சோமு வந்திருக்க வேண்டும், வரவில்லை.  கால் மணி நேர காத்திருப்பில் மூன்று முறை போன் செய்தும் எடுக்கவில்லை. வந்த பக்கமே திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.  


மூளையின் ஓரத்தில்  சுகருக்கு மட்டும் நிரந்தர மருந்து கண்டுபிடித்தால் எப்படி இருக்கும் என்ற நப்பாசை தோன்றியது. குடிக்கும் ஆறு காப்பியிலும் சக்கரை மழை தூவலாம். ஸ்ரீ கிருஷ்ணா மைசூர் பாகையும், ஒரு டப்பா குளோப் ஜாமுனையும் விரல் சப்பி சாப்பிடலாம். ஒரு பயல் கேள்வி கேட்க மாட்டான். யோசிக்கும் பொழுதே நாக்கில் எச்சில் ஊறியது. ஒரு முறை மருமகள் அன்பாக 

சுகர் பிரீ மைசூர்பா வாங்கி கொடுத்தாள் . ஒரே மூச்சில் கால் டப்பாவை காலி செய்தேன். அவ்வளவு கேவலமான ஒரு மைசூர் பாகை வாழ்க்கையில் நான் தின்றதே இல்லை. குமட்டிக்கொண்டு வந்துவிட்டது.    யாரை  கேட்டு  இந்த  கருமத்தை எல்லாம் தயார்  செய்கிறார்கள். போன மாதம் வரை போனால் போகிறது என்று வெல்லத்தால்  செய்த கடலை மிட்டாயை அம்புஜம் அனுமதித்திருந்தாள் . சமீபத்தைய ஆஸ்பத்திரி விஜயத்திற்கு பிறகு அதுவும் அவுட். 



ஒரு வழியாக வந்த வழியிலேயே நடந்து, ரத்னா கபேவை வந்தடைந்தேன். 


“என்ன சார் ஒருவாரமா காணோம்” என்று முதலாளி குமரேசன் அன்புடன் வரவேற்றார். 


“மழையில எங்க சார் “ என்று சொல்லியபடியே , ஆஸ்தான இடத்தை நோக்கி நடந்தேன். அமர்ந்தேன். 


சேட்டு பையனை போல ஒருவன் வந்தான். 


“ஆப்கோ க்யா சாஹியே சார் “ என்றான். 


நான் மைதா மாவு கலரில் இருப்பதனால் ஹிந்திக்காரன் என்று நினைத்து விட்டான் போல. 


பதிலளிப்பதற்குள் கோபியே வந்துவிட்டான். 


“புதுசு சார், போன வாரம் தான் ஒரு செட் பிஹார்லேர்ந்து வந்தாங்க” என்றபடியே டேபிளை துடைத்தான். 


“சக்கரை தூக்கலா ஒரு பில்டர்  காபி  கொடுப்பா” என்றேன். 


சுகர் சிந்தனைகள் மறைந்தன. 



ரஜினி எனும் மாயோன் - 4 - தர்மத்தின் தலைவன்


இந்த தொடரின் முதல் மூன்று பாகங்களை படிக்க - 

 

ரஜினி எனும் மாயோன் - 1 - படிக்க - https://tamil-thinnai.blogspot.com/2021/11/1.html 

 ரஜினி எனும் மாயோன் - 2 - படிக்க - https://tamil-thinnai.blogspot.com/2021/12/2.html

 ரஜினி எனும் மாயோன் - 3 - படிக்க - https://tamil-thinnai.blogspot.com/2021/12/3.html 

டிவிஎஸ் பிப்டியும் - புழுதி பறக்கும் செம்மண்பூமியும்..

விடலை பருவத்தில் , விடுமுறை வந்தால் தவறாமல் எழும் ஒரே கேள்வி பின்னவாசலா இல்லை ஆர் யி சி யா என்பதே . ஒரு பக்கம் நண்பர்கள் , வாய்க்கால், வரப்பு , கிரிக்கெட் போன்ற  அளவில்லாத  பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பின்னவாசல். மறுபக்கம் கால் வைத்தாலே படிப்பு நெடி அடிக்கும்  செம்மண் பூமியான துவாக்குடி . 



இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் என்றுமே எனக்கு சந்தேகம்  இருந்ததில்லை . 

ஆனாலும் "மாடு நினைத்த இடத்தில் தொழுவம் கட்டுவதா" என்று , பெற்றோர்கள் நம் சிந்தனைக்கு மாறாக முடிவெடுப்பதில் கில்லாடிகள் . பின்னவாசால் என்று நினக்கும் முன்பே நம்மை பார்சல் கட்டி துவாக்குடிக்கு அனுப்பி வைப்பார்கள் . 

என்ன தான் நம் மன வரிசையில் இரண்டாம் இடம் பிடித்த ஊர் என்றாலும் , அந்த ஊருக்கும் ஒரு கிக் இருக்கத்தான் செய்கிறது. திருச்சியில் இருந்து, ஒரு மணி நேர ஜன்னல் ஓர பேருந்து பயணம் , நல்லம்மாவின் தட புடலான வரவேற்பு , ஓசியில் கிடைக்கும் பாதாம் கொட்டைகள் என்று ஆரம்பித்து பெரியம்மாவின் அட்டகாசமான சமயல் , நேர்த்தியான பதிமூன்று தெருக்கள் , அகண்ட மைதானங்கள்  , சோர்வடைந்த பழைய கட்டிடங்களும் என்று சொல்லிக் கொண்டே போகலாம். நிற்க . இந்த இடத்தில் - இப்பேர் பட்ட ஒரு ஊருக்கு விடுமுறையில் செல்வதில் என்ன பிரச்சனை என்று  அனைவரும் நினைக்கக்கூடும் . 

ஒரே பிரச்சினை தான் . ஓடியாடுகிற வயதில் ஒரு மணிநேரம் படிக்க சொல்லுவார்கள் அவ்வளவு தான். ஆனந்த விகடனும் குமுதம் என்றால் கூட பராயில்லை, பத்து வார்த்தைகளை கொடுத்து இதற்கு பாஸ்ட் டேன்ஸ், பிரசெண்ட் டேன்ஸ் எழுதி வா என்றால் அந்த குழந்தை பாவம் என்ன செய்யும். அதை மட்டும் தாண்டிவிட்டால் ராஜாவாக வலம் வரலாம் . லக் அடித்தால் பிலக்  தியேட்டரில் படம் பார்க்கலாம் . படிப்பின் அவசியத்தை ஒவ்வொரு நொடியும் உணர்த்தும் ராஜ்யம் அது. அதில் ece எனும் ஒரு  குறு நிலத்தின் மன்னர் தான் கதையின் நாயகனான பெரியப்பா அவர்கள். 

சம காலங்களில் அவரை பார்க்கும் பொழுதெல்லாம் தோன்றும் ஒரே கேள்வி - இவர் எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆக இருக்கிறார் என்பது தான். காரணம் அவர் உடற்பயிற்சி என்று ஒன்று செய்ததை நான் பார்த்ததே இல்லை.   நமக்கெல்லாம் வேலை கிடைத்து நாலு ஆண்டுகளில் வேலையே செய்யாவிட்டாலும் தொப்பை வந்து விடுகிறது . அதனாலேயே பல சமயங்களில் சித்தப்பாவின் சைடில் ஒதுங்கி விடுவது உண்டு. அவரது தொப்பைக்கு முன்னால் நம்முடையது சிறிதாக தெரியும் அவ்வளவு தான் . 

பல பத்தாண்டுகளாக வேலையில் இருக்கும் இவர் இன்று கூட நடந்தே வேலைக்கு போககூடியவர்.  பல சமயங்களில் அவருடன் காலேஜுக்கு சென்ற ஞாபகங்கள் மங்கலாக இருக்கின்றன . சில சமயம் பேப்பர் திருத்தும் பொழுது அவர் போட்ட மதிப்பெண்களை கூட்டி மொத்த கணக்கை சொன்ன நியாபகங்களும் உண்டு . 

ஓரளவிற்கு வளர்ந்த பிறகு எங்கே அட்வைஸ் சொல்லிவிட போகிறாரோ என்று பயந்து ஓடியதும் உண்டு . வாலிப வயதில் அட்வைஸ் என்றால் அப்படி ஒரு அலர்ஜி . அவரும் இவனிடம் இது வேலைக்கு ஆகாது என்று தெரிந்து கொண்டு அட்வைஸ் பண்ணுவதையே விட்டு விட்டார். 

சீன தேசத்தில் யின்- யாங் என்ற ஒரு தத்துவம் உள்ளது . எதிரும் புதிருமாக இருந்தாலும் அவை ஒன்றோடு ஒன்றாக இருக்கும். பக்க பலமாக இருக்கும். பொறுமையின் சிகரமான பெரியப்பவிற்கு சற்றே படபடக்ககூடிய பெரியம்மா . ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் என்பதற்கான உதாரணம். நம் சகோதரிகளை பற்றி தனி கட்டுரையே எழுதலாம் என்பதனால் அவர்களை வேறொரு சந்தர்பத்தில் சந்திப்போம், அலசுவோம்.. 

ஆக பெரியப்பா காட்டிய வழியில்  வளர்ந்த பலரில் நானும் ஒருவன் . அதற்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று நம்புகிறேன். 

இனிமேல் அந்த செம்மண் பூமியில் கால் வைக்க முடியாது என்று என்னும் பொழுது எனோ ஒரு சோகம் வந்து விடுகிறது. நமக்கு மட்டும் இல்லை , பெரியப்பாவின் கால் படாமல்  வாழப்போகும் அந்த மண்ணுக்கும் தான் .. 

என் வாழ்வில் என் அப்பாவுக்கு பிறகு நான் மதிக்கும் பெரிய மனிதர் நீங்கள். வாழ்த்த வயதில்லை , வணங்குகிறேன் 🙏🏼..

BJP and DMK




December 5, 1992, Karunanidhi wrote in Murasoli

‘What does karseva mean? Service to god or service to sow seeds of unrest? [And a lady here to lend a hand to this deed?]
They say Ram was born in the Treta Yuga
Dvapara yuga arrived and has been crossed
When one says this is Kali Yuga
It means twenty lakh years have gone by
‘They say Ram was born there twenty lakh years ago. Who saw that, I wonder? Who has written about it? Now by insisting that this is the exact place, how just is it to demolish Islamic history? ‘
‘If you say you want a temple for Ram in Ayodhya, we have no quarrel about that. But if you say to build the temple you will demolish Babri Masjid, we will not agree!’


One would wonder whether DMK would ever have an alliance with BJP after such a thought provoking article . 

And yes, few years later they went on to be a part of BJP alliance and even took few minister berths for the “cadres” ! 

And guess what , the Ram Mandir will be built by 2023 and who knows , DMK might have an alliance with BJP 🤷🏼‍♂️. 

And that my friends is called  - politics ! 


 


ரஜினி எனும் மாயோன் - 3 - தரமான சம்பவம்

 பாகம் ஒன்று படிக்க இங்கே கிளிக் செய்யவும் -

https://tamil-thinnai.blogspot.com/2021/11/1.html


பாகம் இரண்டு படிக்க இங்கே கிளிக் செய்யவும் -https://tamil-thinnai.blogspot.com/2021/12/2.html 


பாகம் 3 - தரமான சம்பவம்

---------




சந்திரமுகி மாபெரும் வெற்றி பெற்றது. பாட்ஷா / முத்து படங்களில் ரஜினி படைத்த சாதனைகளை படையப்பா முறியடித்தது. அதை எல்லாம் தூக்கி சாப்பிட்டது சந்திரமுகி. உச்சமாக 800 நாட்களுக்கு மேல் ஒரே தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது. அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ள  தமிழ் திரை உலகமே துடித்தது. ரசிகர்களை பற்றி கேட்கவா வேண்டும் . ரஜினியின் ஒவ்வொரு சந்திப்பும் தலைப்பு செய்தி ஆகிறது . சினிமாவில் எப்பொழுதுமே ஒரு கணக்கு உண்டு. ஒரு மாபெரும் படத்திற்கு பிறகு, இளைப்பாறிக் கொள்ள ஒரு சிறு பட்ஜெட் படமோ இல்லை ஒரு காமெடி படமோ நடிப்பார்கள். 


கமல் அவர்கள் இதை தவறாமல் செய்வார், ஹே ராம் படத்திற்கு பிறகு தெனாலி, விருமாண்டி படத்திற்கு பிறகு வசூல் ராஜா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.  ரஜினியே இந்த உத்தியைக் அவ்வப்பொழுது  கையாண்டதாக சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் . பெரிதான காரணம் ஒன்றும் இல்லை, ஒரு மாபெரும் வெற்றிப் படத்திற்கு பின்னர் வரும் படம் அதை விட பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதை சமாளிக்க இப்படி ஒரு உத்தி. இதனால்  பாதிக்கப்பட்ட சமீபத்திய உதாரணம் தெலுங்கு நடிகர் பிரபாஸ் , பாகுபலிக்கு பிறகு மிக பெரிய படத்தில் நடித்து கை , காலை சுட்டுக்கொண்டார். 


சந்திரமுகி இண்டஸ்ட்ரி ஹிட், அடுத்து ஒரு சின்ன படம் செய்ய போகிறாரா ரஜினி என்ற பேச்சு எழ தொடங்கியது. ஆனால் அவரோ வேறு ஒரு முடிவில் இருந்தார். 


இங்கே கால சக்கரத்தை சற்றே  பின்னோக்கி நகர்த்திடுவோம் . 1996 ஆண்டில் இந்தியன் படம் வெளியாகிறது. மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் மாறுகிறது. ஒரு கமர்சியல் படமாக மட்டும் இல்லாமல் விமர்சகர்கள், ரசிகர்கள் என்று அனைத்து தரப்பினரையும் கவர்ந்த படமாக அமைகிறது.  ஹிட் மேல் ஹிட் கொடுத்து, தொட்டதை  எல்லாம் தங்கமாக மாற்றும் வித்தகனாக மாறியிருந்தார் ஷங்கர்  .  அதையடுத்து அவர் ரஜினியை சந்திக்கிறார். பரபரப்பு கூடுகிறது. அப்பொழுது சங்கர் ரஜினிக்கு முதல்வன் பட ஒன் லைனையும், எந்திரன் படத்து கதையையும் சொல்கிறார். சில பல காரணங்களால் அவற்றை ஆறப்போட்டார் ரஜினி.  


அதில் முக்கிய காரணமாக கருதப்படும் சம்பவம் அரசியல் சம்பந்தப்பட்டது. அந்த  வருடம் தான் ரஜினி அவர்கள் தமிழக அரசியலே புரட்டி போடும் அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார் . “ஜெயலலிதா அம்மையார் அடுத்து ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது “ என்று அவர் பற்ற வைத்த பொறி ஜெயலலிதாவையே தோல்வி அடைய வைத்தது. அன்று மட்டும் அவர் மூப்பனாரின் அழைப்பை ஏற்று கட்சி தொடங்கியிருந்தால் தமிழகமே வேறு விதமாக மாறியிருக்கும். சரி கதைக்கு வருவோம்; இப்படி ஒரு ஆட்சி மாற்றத்திற்கு காரணமான ரஜினி அடுத்து ஒரு அரசியல் படமா என்று யோசிக்க அந்த கூட்டணி முறிகிறது. 


ரஜினிக்கு 96இல் சொன்ன அதே ஒன லைனை வைத்து 1999’இல் முதல்வனை சொந்த படமாக ஆரம்பிக்கிறார் ஷங்கர். அர்ஜுன் போன்ற மத்திய தர வரிசையில் இருக்கும் ஹீரோ நடித்திருந்தாலும் அந்த படம் சூப்பர் ஹிட். ரஜினி மட்டும் நடித்திருந்தால்?! ஷங்கருக்கு அடுத்து போதாத காலமாக ஹிந்தியில் அதே படத்தை எடுக்க அது பிளாப். எந்திரனை அமீர் கானை வைத்து ஆரம்பிக்க யோசித்து  , கடைசியாக  கமலை வரை வந்து அந்த படத்தை எடுக்கும் திட்டம் வேலைக்கு ஆகவில்லை. இது வேலைக்கு ஆகாததால், அடுத்து  தமிழில் அவர் எடுத்த பாய்ஸ் படம், அவருக்கிருந்த நல்ல பெயரையெல்லாம் காலி செய்தது. எப்படி ரஜினிக்கு ஒரு பாபா வோ , அப்படி ஷங்கருக்கு பாய்ஸ். ரஜினியாவது விநியோகிஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து பெயரை காப்பாற்றிக் கொண்டார். ஷங்கருக்கு மீண்டும் முதல் படத்தில் இருந்து ஆரம்பிப்பது போல ஒரு நிலைமை. ஆக்ரோஷமாய் தனது  இருப்பை நிரூபிக்க விக்ரமை வைத்து அந்நியன் எடுக்கிறார். பெரிய ஹிட். வர்த்தக ரீதியில் தான் நம்பர் 1 இயக்குனர் என்று நிரூபிக்கிறார். அடுத்து ரஜினியை சந்திக்கிறார். ஆட்டம் ஆரம்பமாகிறது. 


அப்பொழுது எந்திரன் படம் பற்றிய பேச்சு வர அதை பின்னர் பார்க்கலாம், ஒரு சமூக கருத்துள்ள கமர்சியல் ஹிட் படம் வேண்டும் என்று ரஜினி கேட்க, உதயமானது சிவாஜி படம். இது ரஜினிக்கு 100ஆவது தமிழ் படம். தயாரிப்பாளர் யார் என்று ரஜினியே கையை காட்டுகிறார். ஏவிஎம் ஸ்டூடியோ சென்று சரவணனிடம் பேசுகிறார். அவர்களுக்கு ஷங்கர் மேல் சிறிய தயக்கம் இருந்தாலும், ரஜினியே கேட்ட பின்னர் மறுப்பார் யார்? பிரம்மாண்டமாக தயார் ஆகிறது சிவாஜி திரைப்படம்.  


ஷங்கர் வழக்கம் போல இரண்டு ஆண்டுகளில் படத்தை நிதானமாக அதே சமயம் ஜனரஞ்சகமாக  இயக்குகிறார். படத்தின் ட்ரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு. பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின்றன. அனைத்து ஏரியாவுக்கு விற்று தீர்கிறது . வியாபார ரீதியாக ஏவிஎம் நிறுவனத்திற்கு வெளியிடும் முன்னரே  நல்ல லாபம் கிடைக்கிறது . 


படம் வெளியாகிறது, அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெறுகிறது. ஷங்கர் ஏற்கனவே ஜென்டில்மேன் / முதல்வனில் அரைத்த பார்முலாவை ரஜினிக்கு ஏற்றவாறு பொருத்தியிருந்தார்.   சுஜாதாவின் வசனங்கள் படத்தை அடுத்த கட்டத்திற்கு செல்ல வைத்தன . "சும்மா அதிருதில்ல " என்ற பன்ச் டயலாக் மெகா ஹிட் ஆகிறது . மொட்டை தலையுடன் ரஜினி வருவது போன்ற ஒரு விளம்பரம் நாளிதழ்களில் வெளியாகி தமிழகத்தையே பேச வைக்கிறது . அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக சிவாஜி கொண்டாடப்படுகிறது. இதில் வரும் ஒரு பாடலில் ரஜினி கை விரலில் இருந்து செல்லும் துப்பாக்கி சுட்டு விட்டு, மறுபடியும் அவரது  கைக்கு வந்து சேரும். இது வட இந்தியாவில் மிகப் பிரபலமாக, ரஜினிகாந்த் ஜோக்குகள் பிறக்கின்றன . அன்றைய தேதியில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவான இந்த படம் 150 கோடி வசூல் செய்கிறது. அன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் உச்ச வசூல் அது  தான். 



ரஜினியும் , ஷங்கரும் அவரவர் துறையில் தன்னை ராஜாவாக நிலை நிறுத்துகிறார்கள்.  ரெக்கார்டுகளை உடைக்கவே பிறந்தவர்கள் ரஜினி மற்றும் ஷங்கர் என்பது நிரூபணம் ஆகிறது. வெற்றி மேல் வெற்றி அடுத்து தலைவர் எடுக்கும் முடிவு இப்படி இருக்கும் என்று யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.


ரஜினி எனும் மாயோன் - 2 -அடிபட்ட சிங்கத்தின் கர்ஜனை


முதல் பாகத்திற்கு இங்கே செல்லவும் --> ரஜினி எனும் மாயோன் - 1



ஒரு வாலிபன் தோல்வி கண்டால் ஒன்று அவன் உத்வேகம் எடுத்து உலகை ஆள்வான். இல்லை துவண்டு போய் மரணிப்பான் . இதை தாண்டி தண்டமாக யாருக்கும் உபயோகம் இல்லாமலும் இருக்கலாம். இதில் வாலிபனை எடுத்து விட்டு , ஒரு 52 வயது மனிதன் என்று பொருத்தி பார்க்கவும். அதுவும் சாதாரணமான மனிதன் அல்ல. திரை உலகில் பல ஆண்டுகளாக ராஜாவாக வலம் வருபவர் அவர் . அவர் முடிந்து விட்டார் என்று ஒவ்வொரு ஐந்து வருடமும் ஒரு செய்தி வரும் . அதன் பின்னர் அவர் கொடுக்கும் அடி மரண அடியாக இருக்கும் . அந்த மனிதனின் பெயர் ரஜினி .


1990 இன் ஆரம்பத்தில் இருந்து அவர் நடித்த ஒரே ஒரு படம் தான் தோல்வி அடைந்தது . அதுவும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாத படம் தானே தவிர , தோல்வி படம் என்று ஒரேடியாக ஒதுக்கி விட முடியாது.  அப்படி வெற்றி மேல் வெற்றி கண்ட ரஜினியை , ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது பாபா படத்தின் தோல்வி. 



ஒரு மனிதன் வெற்றியை கொடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் என்ன செய்வான்? ஒரு மரண உழைப்பை தருவானா மாட்டானா.  அப்படி இருக்கும் பொழுது யாரும் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ரஜினியின்  பெரிய வெற்றிப் படங்கள் பலவும் அமிதாப்பச்சன் படங்களின் தமிழாக்கமே.  அதே பாணியில்  பி.வாசு அவர்களின் கன்னட படம் ஆப்தமித்ரா பார்த்து , அவரை அழைக்கிறார். ஏற்கனவே மன்னன் எனும் மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த கூட்டணி இது . 


படத்தைப் பற்றி சிலாகித்துப் பேசிவிட்டு நாம் இதை செய்யலாமா என்று கேட்கிறார். ரஜினி கூப்பிட்டால் யார் மறுக்க முடியும். பி வாசு அதற்கு சம்மதிக்கிறார். அடுத்து யார் என்ற படத்தை தயாரிப்பது என்ற கேள்வி எழுந்தது . ஏற்கனவே சொந்தப்படம் எடுத்து கையை சுட்டுக்கொண்ட  ரஜினி இதற்கு மேலும் லதா ரஜினி படம் தயாரிக்க விடக்கூடாது என்ற முடிவிலேயே இருந்திருப்பார். பாபா படத்திற்கு பிறகு அவர் சொந்த படத்தில் நடிக்கவே இல்லை. ஏற்பட்ட ரணம் அப்படி.

பாபா படத்தின் தோல்விக்கான மிக முக்கியமான ஒரு காரணமும் இருக்கிறது. அது சொந்த தயாரிப்பில் வந்த படம் என்ற போர்வையில் ஒளிந்திருக்கிறது. லதா ரஜினி அவர்கள் ஒரு பிசினஸ் வுமனாகவும் , ஒரு பத்திரிக்கையாளராகவும் அறியப்படுகிறார். அவரே பாபா படத்தின் பிசினஸை பார்த்துக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. படையப்பா என்னும் மாபெரும் வெற்றிப்படம் ஒரு பக்கம், மூன்று வருடங்களுக்கு பிறகு வரும் ரஜினி படம் என்பது மறுபக்கம். இதைவைத்து ஒரு மாபெரும் பிசினஸை நடத்தி முடிக்கிறார் லதா. 

படத்தில் ஒரே ஒரு  நிமிடம்  எந்த ஒரு பொருள் வந்தாலும் அதற்கு ஒரு விலை நிர்ணயித்து பல லட்சம் பெற்றதாகவும் செய்திகள் இருக்கின்றன. தங்க முட்டையிடும் வாத்தை அறுத்த கதையாகவே பாபா படத்தின் பிசினஸை பற்றி சொல்கிறார்கள். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று ரஜினி குடும்பத்திற்கே வெளிச்சம். ஆனாலும் இந்த படம் கொடுத்த பாடத்தால் சொந்த தயாரிப்பையே விட்டார் ரஜினி. நிலைமை இப்படி இருக்க அடுத்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது பேசு பொருளானது.

 சிவாஜி புரொடக்ஷன்ஸ் அவர்களின் ஐம்பதாவது படத்தில் நடிப்பதாக ஏற்கனவே வாக்கு கொடுத்திருந்தார் ரஜினி .  ராம்குமார் , பிரபு அவர்களை சிவாஜி இல்லத்தில் சந்திக்கிறார் . சொந்த படம் என்பதால்  படத்தில் பிரபுவும் இருப்பார். அதுவும் ஒரு ஹிட் காம்பினேஷன் . ரஜினியின் படங்கள் அனைத்தும் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும். படத்தின் 90 சதவீத காட்சிகளில் அவர் மட்டுமே வருவார் அல்லது அவரோடு சேர்ந்து மற்றவர்களும் வருவார்கள். ஆனால் இந்தப் படம் அதைப் போல இல்லாமல் ரஜினிக்கும் ஜோதிகா விற்கும் சமமான அளவில் திரையை பங்கு போட்டு கொடுத்திருந்தார்கள். 


இந்தப் படம் ஜனரஞ்சகமாக வர வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தவர் ரஜினி . அந்த ஒரே காரணத்தினாலேயே வடிவேலுவை எப்பாடுபட்டாவது புக் செய்யும்படி கேட்டுக் கொண்டார். இசையமைப்பாளராக வித்யாசாகரை போட்டார்கள் . அவர் அற்புதமான ஆறு பாடல்களை கொடுத்தார்.  பாடல் உரிமை மட்டுமே ஒரு கோடிக்கு விலைபோனது .இவை அனைத்தும் ரஜினிக்கும் மாபெரும் நம்பிக்கையை அளித்திருக்க  வேண்டும்.  இதன் வெளிப்பாடாக கேசட் வெளியீட்டில் வந்த வார்த்தைகளே "நான் யானை அல்ல குதிரை "  , " விழுந்தவுடன் சட்டுன்னு எழுந்து விடுவேன்" என்பவை. 


நினைத்துப் பாருங்கள் ஒரு தோல்வியை கொடுத்த நடிகர் என்றுமே அடக்கி தான் வாசிப்பார். இங்கே வெற்றியின் பின்னர் ஆடுபவர்கள் மிக மிக அதிகம். தோல்வியின் பின்னர் வெளியே தலைகாட்டாமல் சுற்றுபவர்கள் இன்னும் அதிகம். அப்படி இருக்கும்போது அடுத்த படத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் இப்படி எல்லாம் சொல்லத் தோன்றும்.


படம் ரிலீஸ் ஆகிறது அதிரி புதிரி வெற்றி என்பார்களே அதைப் போன்ற ஒரு வெற்றியைத் தருகிறது இந்தப் படம் இதற்கு ஒரே சான்று- சிவாஜி குடும்பத்திற்கு சில பழக்கங்கள் இருந்ததாகவும் சந்திரமுகி என்னும் ஒரே படத்தினால் அவர்கள் ஏற்கனவே இருந்த தனது சொத்துக்களை மீட்டு லாபகரமாக மாறியதாகவும் தகவல்கள் உண்டு. தமிழ் சினிமாவில் அபூர்வமாகத்தான் இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள் வரும். அந்த  வரிசையில் இந்தப் படம் சேர்ந்தது. 


இத்தனைக்கும் இந்த படம் தனி ரிலீஸ் கூட கிடையாது . கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் தானு / விஜய் காம்போவில் வந்த சச்சின் என்ற இரு பெரும் படங்களுடன் மோதி இந்த வெற்றியை பெற்றது சந்திரமுகி . வெறும் இருபது கோடியில் தயாரான படம் ,70 கோடி வரை வசூலித்தது . பல இடங்களில் ரெக்கார்டு ப்ரேக் . "லக லக லக" மற்றும் "மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு" போன்றவை ட்ரெண்ட்  ஆகின .


ரஜினி தான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்று நிரூபித்த தருணம் அது . இந்த வெற்றி கொடுத்த உத்வேகம் தான் இன்று வரை ரஜினியை நகர்த்துகிறது என்றால் அது மிகையல்ல. பாபா படத்தின் அத்தனை தவறுகளையும் நிறுத்திக்கொண்டார். சொந்த படம், குடும்ப தலையீடு , தேவை இல்லாத அரசியல் , ஆன்மிகம் இல்லாமல் வந்த படம் இது. 


ரஜினியே நடித்தாலும், பாபா போன்ற படங்கள் தோல்வி தான் அடையும் அதே நேரத்தில் நல்ல கதை, காமெடி , பாடல்கள் உள்ள படம் என்றும் ஜெயிக்கும் என்பது சந்திரமுகியில் நிரூபணமானது. 2005 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார் ரஜினி. அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தது. 


இந்த வலைப்பதிவில் தேடு

Categories

Random Posts

3/random/post-list
Blogger இயக்குவது.

Pages

search