2023 ஆம் ஆண்டில் இதையெல்லாம் செய்யப் போகிறோம் என்று நீண்டதொரு லிஸ்ட் போட்டு வைத்திருந்தேன். திறந்து பார்ப்பதற்கே சற்று சங்கடமாகத் தான் இருந்தது. ஆனாலும் அதிலிருந்த ஒன்றோ இரண்டோ செய்ய முடிந்தது சந்தோஷமே.
https://writervivek.com/2022/12/2023-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
2022 ஆம் ஆண்டில் எழுதிய கவிதைகளுக்கு பெரும் வரவேற்பு இல்லை , அதனால் இருங்கடா வரேன் என்று 2023 ஆம் ஆண்டு கவிதையாக எழுதி கிறுக்கி விட்டேன். அவற்றைப் பார்த்து தான் உங்கள் புத்தாண்டை நீங்கள் தொடங்க வேண்டும் என்று ஏதும் சங்கல்பம் இருந்தால் இதோ இங்கே படிக்கலாம்.
https://writervivek.com/category/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/
பஅர்த்தமுள்ள ஒரு நீண்ட சிறுகதை எழுத வேண்டும் என்று எண்ணமிருந்தது, இந்த வருடத்தில் ஒன்று இரண்டு எழுதி இருக்கிறேன். அதிலும் அஸ்தமனம் என்னும் சிறுகதை கொஞ்சம் அதிக வரவேற்பை பெற்றது எனக்கே ஆச்சரியம் தான்.சிறுகதைகள் படிக்க இங்கே க்ளிக்கவும்
https://writervivek.com/category/%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/
இரண்டு நாவல்களில் எழுத ஆரம்பித்த கொஞ்ச நாளில், அவை நாவலே இல்லை என்று பல்பு வாங்கினாலும் , இரண்டும் தொடர்கதை ரகத்தில் வருகிறது. அதில் ஒன்று நத்தை வேகத்தில் நகரவும் செய்கிறது.
ரஜினி எனும் மந்திரன் - தொடராக வந்தது, புத்தகமாகவும் வந்தது. இப்போது பணம் எனும் பழக்கம் அடுத்த அத்தியாயத்திற்கு தயாராக நிற்கிறது. அமெரிக்காவின் அவலங்களை பேசும் அமெரிக்கா என்னும் மாயை விட்ட இடத்தில் அப்படியே நிற்கிறது. இவை இரண்டையும் அடுத்த வருடத்தில் நிறைவு செய்ய வேண்டும். அவற்றின் லிங்க் கீழே உள்ளது.
2024 ஆம் ஆண்டில் இத்தனையும் எழுத முடியுமா என்று தெரியவில்லை ஆனாலும் எழுத நின்றாலே பெரிய விஷயம். இதற்கெல்லாம் மேலாக , 2024 election வருடம், பாஜக , திமுக என்று twitter களை கட்டும். அதற்கும் சில கட்டுரைகளை எழுத திட்டம் போட்டு வைக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் வேகம் புருவங்களை உயர்த்துகிறது. வாரிசு மோதல் வராத திமுக, ஆனாலும் உதயநிதி என்ன செய்வார், பஜக மீண்டும் ஆட்சிக்கு வருமா?
மற்றபடி இந்த வருடம் அனைவரும் நலமாக வளமாக இருந்தாலே போதும்.
0 கருத்துகள்