ஷங்கர்

ஷங்கருக்கு படபடப்பு அதிகமானது, உடல் வியர்த்து, சட்டை நனைய தொடங்கியது. அடடா இப்படி செய்து விட்டோமே என்ற நினைப்பு வந்து வந்து சென்றது. தரையில் ரத்தம் படற தொடங்கி, இவன் காலருகே நின்று, இவனை தொடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. மிக அருகாமையில் சாந்தி அசைவற்று கிடந்தாள், இவன் கிரைண்டர் கல்லை தூக்கி மண்டையில் அடித்த இடம், சகதியாக இருந்தது. இது சாந்தி தானா என்ற சந்தேகம் இவனுக்கே வந்தது. சந்தேகமேயில்லை அவளே தான், எப்பொழுதும் ஒரு நக்கல் சிரிப்புடன் இவனை மதிக்காமல் பார்த்த, அந்த கண்களை இப்பொழுது தேடினான் .  விட்டெறிந்த கிரைண்டர் கல் மூன்று  அடி தள்ளி தரையைப் பிளந்து கிடந்தது. கொலை செய்து விட்டோமே , இனி என்ன செய்வது என்ற கவலையை மீறி ஒரு நிம்மதி கிடைத்தது. ஆறு ஆண்டுகளுக்கு பின்னால் அவன் முகத்தில் புன்னகை.


அடுத்து ஆக வேண்டியதை கவனிக்க வேண்டும், பல படங்களில் பார்த்திருந்தாலும் அவனுக்கு அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. கிச்சனில் இருந்து வெளியேறி , பாத்ரூமிற்கு நுழைந்தான். முகத்தை கழுவி விட்டு , உடை மாறினான். ஒரு சிகரெட்டை பற்ற வைத்து , ஐந்து இழுப்புகள் இழுத்து, அணைத்தான். நாளை காலை வரை வேலைக்கார அம்மா வர மாட்டாள், அதனால் நிதானமாக செயல்படுவது என்று முடிவு எடுத்தான். முதல் கட்டமாக சமையல் அறையில் தெறித்த ரத்த துளிகளை பேப்பரால் துடைத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் சேமித்தான். சுத்தம் செய்கையில், சாந்தியின் கால் இடறியது, ஓங்கி ஒரு மிதி விட்டான், சாவு என்று மனதில் நினைத்துக் கொண்டான்.



இரு வாரங்களுக்கு முன்னர் வரை , தனக்கு வேலை இல்லாத காரணத்தால் மட்டுமே  , சாந்தி தன்னை அவமானப்படுத்துவதாக எண்ணிக் கொண்டிருந்தான். வேலை பறிபோனதிற்கு அவன் காரணமே இல்லை, தேடிக்கொண்டு தான் இருக்கிறான், ஆறு மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தால் தான் என்ன? இதை ஒரு காரணம் காட்டி சாந்தி , இவ்வளவு அவமானப்படுத்த தேவையே இல்லை. ஆமாம் , குழந்தை இல்லை தான்,  காதல் கல்யாணம் இல்லை தான் , இவனுக்கு சராசரிக்கும் கீழ் ஆன் அணுக்கள் இருந்தாலும், மருத்துவர் பரிந்துரையின் பேரில், நாளைக்கு மூன்று வேளையும் மருந்துகள் உண்டான், அதே நேரம், இந்த சனியன் பிடித்த சிகரெட்டையும் விட முடியவில்லை. ஆனால் இக்காரணங்கள் அனைத்தும் பொய் என்பதை நேரிலேயே கண்டான். வாழ்கை வெறுத்தான்.  


வேலையில்லா கணவர்களின் தலையில் அணைத்து வீட்டு வேலைகளும் விழும், ஆனாலும் இவனிடம் சம்பாதித்த பணம் இருந்ததால், வேலைக்காரியை வைத்து சமாளித்து வந்தான். இவனின் ஒரே வேலை , அவளுக்கு காலை மாலை டிரைவர் ஆக இருப்பது தான். அன்றும் அதே  போல் அவளை கூட்டி வர அலுவலகம்   சென்றான்,  அரை மணி நேர காத்திருப்பு. மூணு சிகரெட் , ஆறு போன் கால்களுக்கு  பின்னரும் அவளை காணாததால் , செக்யூரிட்டி பக்கம் சென்று விசாரித்தான். அவள் மதியமே , கூட வேலை பார்க்கும் குணா என்பவருடன் சென்றுவிட்டாள் என தகவல் அறிந்தான். மனம் எங்கேயோ சென்றது, காரணம், ஆறு ஆண்டுகளாக அவள் கர்பமாகவில்லை. அப்படி இருக்காது என்று நம்பி, காரில் கிளம்பினான்.  சிகரட்டை துழாவினான், பாக்கெட் காலி.  போகும் வழியில் ஒரு கடையில் நிறுத்தி வாங்கி ஒரு இழுப்பு இழுக்கும் போது , அன்னபூரணி லாட்ஜ்ல் இருந்து வந்த சாந்தியை கண்டான். அவளருகே கருப்பாக, அரை கிராப் வெட்டி, அவள் கூடவே கை கோர்த்து குணா வந்தான்.  இவன் மறைந்து அவர்களை கவனித்தான். பல ஆண்டுகள் காதலித்தவர்கள் போல , உலகத்தை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் எதிர் திசையில் நடந்து சென்றனர். அன்றிலிருந்து வீட்டில் ஒரே சண்டை . அது இன்று , "நீ எல்லாம் மொதல்ல ஒரு ஆம்பளைனு நிரூபிச்சுட்டு கேள்வி கேளு" என்ற இடத்தில் முடிவு பெற்றது. வந்த கோவத்திற்கு எதை எடுத்து அடிப்பது என்று தெரியாமல் சங்கர், கனமாக இருந்தாலும் பரவாயில்லை என்று கல்லை தூக்கி மண்டையில் ஒரு போடு போட்டான் , ரத்தம் தெறித்து அவள் கீழே சரிய, இவன் கல்லை விட்டெறிந்தான். தவறு செய்து விட்டோம், கத்தியால் குத்தி இருந்தால், இவ்வளவு வேலை இல்லை என்று நொந்து கொண்டான்.



அவள் சடலம் இருந்த சமையல் அறையிலிருந்து வெளியே வந்தான். போனை எடுத்தான், யாரிடமோ பேசினான் , பேச்சில் ஒரு தெளிவு தென்பட்டது.



அடுத்த நாள் காவல் நிலையத்தில் சரண் அடைந்தான். தன்னை ஒரு ஆண் மகனாக கற்பனை பண்ணிக் கொண்டான்.



Pagam 1

வண்டிப்பாளையத்தில் புழுதி பறக்க வந்து நின்றது அந்த பச்சை நிற பேருந்து. வந்து நிற்கும் முன்பே வாலிபர்கள் சர சரவென குதித்து ஓட , வயோதிகர்கள் ,மற்றும் ஓடும் வண்டியில் இருந்து இறங்க தெரியாத அப்பாவிகள், படிகளை நோக்கி படை எடுத்தனர். வாலிபர்கள் குதித்த அதே நேரத்தில், கிழே நிற்கும் கூட்டம் பேருந்தின் உள்  நுழைய ஆயத்தமானது. வேட்டியை இழுத்துக்கொண்டு ஒரு பெருசு இறங்கியதும் ஒரு வாலிபர் அவரை உரசிக்கொண்டு உள்நுழைய பார்க்க, பெருசு முணுமுணுக்க, "யோவ் பெருசு சீக்கிரமா போயா " என்று பின் நின்ற முறுக்கு மீசை அதட்ட   என அந்த இடமே ஒரு களேபரம் ஆகிக்கொண்டிருந்தது. இது எதுவும் அறியாமல் சோலையப்பன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான், அவனது பயணம் அவ்வளவு அயற்சியானது .  அவனது பல மணி நேர பயணத்தின் கடைசி இலக்கு இந்த நிறுத்தம், ஆனாலும் ஜன்னல் ஓரமும் , வீசி வரும் ஒரு மெல்லிய காற்றும் , அரை மணி நேரம் முன் உண்ட சோறும் அவனுக்கு துக்கத்தை வரவழைத்தன. மதிய சோற்றுக்குக் பின் வரும் துக்கம் அலாதியானது. 


ஒரு வழியாக அனைவரும் ஏறும் வழியில் இறங்கி, இறங்கும் வழியில் ஏறி, வாலிபர்கள் படியில் தொங்க , நடத்துனர் விசிலை ஊத , வண்டி நகர , சோலை முழித்தான். . தான் இறங்க வேண்டிய இடம் பின்னல் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் . எழுந்து நின்று நடத்துனரிடம் மன்றாடினான் . எரிச்சலுடன் வண்டியின் வேகத்தை குறைத்த ஓட்டுநர் திரும்பி பார்க்க, நடத்துனர் "இன்னும் யாராவது எறங்கணுமா" என்று நக்கலாக கேட்க, அனைவரும் சோலையை திரும்பி பார்த்தனர். சோலை இந்த ரணமான கணத்தில் இருந்து தப்புவதற்காக வண்டியின் பின் படியில் இருந்து குதித்தான். குதித்ததில் கல் ஒன்று செருப்பையும் மீறி குத்தியது . 


வேறு யாராவது இருந்திருந்தால் , ஐயோ அம்மா , அல்லது ஒரு ஷ்ஹ் சப்தமாவது வந்திருக்கும். 30 ஆண்டு கால் செருப்பில்லா கால்களுக்கு அந்த வலி தெரியவில்லை. செருப்பு பிய்ந்து இருக்குமோ என்ற கவலை வந்தது சோலைக்கு. சாலைக்கு ஓரத்தில் இருந்த மரம் வரை நடந்து சென்று , செருப்பை கழட்டி பார்த்தான். கருங்கல் ககுத்தியதில்  குதி கால் படும் இடத்தில் ஒரு ஓட்டை.  சோலைக்கு கவலை  அதிகமானது, செருப்பின் வாரு  பிய்யவில்லை , இப்படியே ஒரு ஆறு மாதம் ஓட்டிவிடலாம் , அல்லது செருப்பில்லாமல் சுத்தலாம். வேண்டாம், இவனை செருப்பில்லாமல் பார்த்தால் அவனது பையனுக்கு கோவம் வந்து விடும். ஓட்டை செருப்போடு சுற்றி திரிந்தால் , மழை காலம் வரை ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் மழை காலத்தில் ஓட்டை வழியாக தண்ணீர் புகுந்து, குழகுழப்பை கொடுத்து ஒரு மாதிரி ஆகிவிடும். புது செருப்பு விலை அதிகம் என்பதால், அதை பற்றி அவன் நினைக்கவே இல்லை.  இவ்வாறு பல வித எண்ணங்கள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. முடிவாக ஒரு முடிவுக்கு வந்தான். ஆம் , செருப்பை சரி செய்து விடுவது என்பது தான் அந்த முடிவு. கழட்டிய செருப்பை மாட்டி , பஸ் ஸ்டாண்ட் இருக்கும் வழியை  பார்த்தான். ஒரு 200 அடி இருக்கும் , எப்படியும் ஒரு செருப்பு தேய்ப்பவன் இல்லாமலா போய்விடுவான் என்ற நம்பிக்கையில் நகர்ந்தான். 


 செருப்பு தேய்ப்பவன் எங்கே என்று கண்களால் மேய துடங்கினான். ஒரு 50 ஆதி தூரத்தில் ஒரு மரம் , அதன் கீழே சின்னதாக ஒரு தரை கடை தென்பட்டது. அருகே சென்று பார்த்தல், செருப்பு கடைக்கான அத்தனை அடையாளங்களும் இருந்தன. சிதறி கிடந்த ரப்பர் துண்டுகள், ஒரு பையில் ஜவ்வு , நூல் கண்டு மற்றும் தைக்கும் ஊசி. முக்கியமாக , கடைக்கு பெயரோ , இல்லை பலகையோ இல்லை. செருப்பு தைப்பவன் மதிய உணவுக்கு சென்றிருப்பான் போல. சரி வரட்டும், செருப்பை தைத்து விட்டே செல்லலாம் என தீர்மானித்தான் . ஐந்து நிமிடதிதில், பகட்டாக உடை அணிந்து ஒரு வாலிபன்  வந்தான்., வண்டியை நிறுத்திவிட்டு இவனை பார்த்தான் . 




"செருப்பு தைக்கணும்  , எவ்வளவு ஆகும்" என்று இவனிடம் கேட்டான் . 




"ஆள் , இல்லைங்க " என்று சோலை பதில் கூறியபடியே , அந்த வாலிபனை  நோட்டம் விட்டான். நல்ல வசதியான விட்டு பிள்ளை என்று தெரிந்தது. வெள்ளை நிறத்தில், பளீரென ஒரு சட்டை, கீழே புளு கலரில் ஒரு பேண்ட். நல்ல திடகாத்திரமான பேண்ட் அது, அதற்க்கு கீழ் ஒரு நல்ல செருப்பு . நல்ல செருப்பை வைத்துக்கொண்டு இந்த கடையில் என்ன வேலை என்று நினைக்கும் பொழுது, அதை இடைமறித்தான் அந்த வாலிபன். "எப்போ வருவான்? " என்று அந்த வாலிபன்  கேட்க . "தெரியலைங்க" என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே செருப்பு தைப்பவன் வந்தான். 




சோலை பேசத்தொடங்கும் முன்னரே , " இந்த,இத சீக்கிரமா தைச்சு கொடு" எண்டு ஒரு பையை அவனிடம் வீசினான் பகட்டு தம்பி. 




செருப்பு தைப்பவனுக்கு ஒரு நொடி கோவம் வந்தது, அனால் அதை காட்டிக்கொள்ளாமல் , சரி என்பதை போல தலையை ஆட்டி, "த்து" என வெற்றிலை எச்சிலை உமிழ்ந்தான். 




அப்பொழுது தான் அவன் சோலையை பார்த்தான்.

இந்த வலைப்பதிவில் தேடு

Categories

Random Posts

3/random/post-list
Blogger இயக்குவது.

Pages

search