இன்று மகா சிவராத்திரி - நமக்கு மிகவும் பிடித்தமான, நெருக்கமான சிவனின் தினம். அவருக்கென்று இருக்கும் ஒன்றிரண்டு தினங்களில் இதுவும் ஒன்று.. ஆறு லட்சம் கடவுள்கள் இருந்தாலும், ஹிந்து மதத்தில் நமக்கு பிடித்தவர்களை மட்டும் கும்பிடலாம். மற்றவர்களை ஒதுக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு பிடித்த கடவுள்களிடம் கோரிக்கை வைத்து விட்டு, மற்றவர்களிடம், என் அப்பன் சிவன் எனக்கு செய்வார், நீ பார் என்று கெத்து காட்டலாம்.
என்னப்பா நீ, உனக்கு தெரியுமா? எல்லா கடவுளும் ஒன்றே , நாமே கடவுள், “நீ ” தான் கடவுள் , அவன் தான் கடவுள், அல்ல அது தான் கடவுள் என்றெல்லாம் தூக்கிக் கொண்டு வர வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு interpretation வைத்துக் கொள்ளும் அளவிற்கு இந்த மாதத்தில் அனுமதி உண்டு. உனக்கு எது கடவுளோ அதை நீ கும்பிடு, என்னை என் வழியில் விடு.
சரி இவ்வளவு கடவுள்களில் ஏன் சிவன்? படைத்துவிட்டு ஒதுங்கி விடுகிறார் ப்ரஹ்மா. பல அவதாரங்களில் நம்மை காக்கின்றார் விஷ்ணு. சிவன் அழிப்பவர் என்றெல்லாம் நம்மிடம் மேலோட்டமான கதைகள் உண்டு. இதையெல்லாம் வைத்து முன் இருவரையும் ஒரு படி மேலேயும் , சிவனை ஒரு படி கீழும் பார்க்க முடியாது. சிவன் நின்றால் காலம் நிற்கும். அந்த கால படங்களில் பறக்கும் பறவைகளையும், கடலையும் ஒரு frame ஸ்டாப் செய்து காட்டுவார்களே, அப்படி. அவனில்லாமல் இவ்வுலகு இல்லை. இதையெல்லாம் தாண்டி , சிவன் ஒரு குடும்பஸ்தர். பல அவதாரங்கள் எல்லாம் இல்லை. ஒரே ஒன்று , அதிலும் ஒரு பழத்தை வைத்து அண்ணன் , தம்பியை ஓட விட்டு என்டேர்டைன்மெண்ட் பார்க்கும் அளவிற்கு கை தேர்ந்த குடும்பஸ்தர். சிக்ஸ் பேக் மேனி, male பண் முடியெல்லாம் இவரிடமே உண்டானது.
சிவனின் முதல் - தெரியாது. ஆதி-தேவனான அவர் ஒரு சுயம்பு. ரஜினிகாந்த் சொல்வதை போல எங்கிருந்து வந்தார் , எப்படி வந்தார் என்று தெரியாது ஆனாலும் சரியான நேரத்திற்கு வந்து, ஒரு யுகத்தின் முடிவில், அனைத்தையும் அழித்து, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து வைப்பவர். அவர் இல்லை என்றால் இங்கு எவருக்கும் டப்பா டான்ஸ் ஆடாது என்பது மட்டும் உறுதி. அவரை போலவே நாமும், கெட்டதை அழித்து , நல்லதை ஆரம்பிப்போம்.
நம் கடவுள்களில் முருகனுக்கு ஒரு பெரும் இடம் உண்டு. தமிழ் கடவுள் என்று ஒரு வட்டத்தில் முருகனை அடக்க பார்த்தாலும், முருகனின் ஈர்ப்பு அளக்க முடியாதது. சின்ன வயதிலேயே அண்ணனால் ஏமாற்றப்பட்ட அனுபவத்தில் ஆரம்பித்து, கோவணத்தில் காட்சி தந்து, போர் புரிந்து, இரட்டை திருமணம் வரை செய்த கடவுள்கள் எத்தனை உண்டு இங்கே?நம்மை போல அவருக்கு தொப்பை கூட இருந்திருக்க கூடும், யார் கண்டது. இப்படி நமக்கும் முருகனுமாக தொடர்பு, தொப்புள் கொடி உறவு . நம்மிடம் மிஞ்சிய அறுபடை வீடுகளில் முருகனின் வளர்ச்சியை காணலாம். மலைகளின் கடவுள், போர்களின் கடவுள் என்று ஆரம்பித்து, காதல் கடவுள் என்பது வரை முருகனுக்கு பொருந்தும் . என்னடா பட விமர்சனம் என்று போட்டு விட்டு , முருக புராணமா இருக்கே என்று யோசிக்க வேண்டாம். இந்த கடைசி விவசாயிக்கும் முருகனுக்கும் ஒரு பெரும் தொடர்பு உண்டு.
சரி படத்திற்குள் செல்வோம்.
நம் தலைமுறையினர் முக்கால்வாசி பேர் ஒன்று கிராமத்தில் இருந்து வந்திருப்போம். அல்லது கிராமத்திற்கு அடிக்கடி சென்று வரக்கூடிய அளவிலாவது ஒரு தொடர்பை வைத்திருப்போம். இன்று நினைத்தபடி கிராமத்திற்கு சென்று ஒரு நாள் நம்மால் தங்க முடியுமா என்றால், சந்தேகமே. அப்படிபட்டோற்கென்றே ஒரு படத்தை எடுத்திருக்கிறார் மணிகண்டன். நம் கை பிடித்து ரம்மியமான ஒரு கிராமத்திற்கு அழைத்து செல்கிறார். கதை மாந்தர்கள் யாரும் “நடிக்கவில்லை” என்பதால் நம் குடும்பத்தின் கதை ஒன்றை அருகில் இருந்து பார்ப்பதை போன்ற ஒரு அனுபவத்தை தருகிறது இந்த படம்.
கதை இது தான் என்று வரையறுக்க முடியாத ஒரு படம் இது. சற்று கூட செயற்கை தனமோ , வேண்டுமென்றே புகுத்தப்பட்ட கமர்ஷியலிசமோ இல்லாத படம். கதையின் நாயகன் எண்பது வயதுக்காரர். அதனாலேயே , சண்டை, காதல் போன்ற கிளிஷே இத்யாதிகளுக்கு இடம் இல்லை. ஆனாலும் படத்தில் காதல் உள்ளது, சண்டை உள்ளது, சமூக கருத்து உள்ளது. எதையும் திணிக்காமல் , அதே சமயம் போகிற போக்கில் சொல்லாமலும் ஒரு மெல்லிய கோட்டில் சொல்லவேண்டியதை சொல்கிறது இந்த படம்.
ஹீரோவான மாயாண்டிக்கு வயது ,எண்பது. இன்று நிஜத்தில் அவர் இல்லை, ஆனால் திரையில் பல நூறு ஆண்டுகள் வாழ்வார். அவரின் தயங்கிப் பேசும் தன்மையும், காது கேட்காமல் மறுமுறை கேட்கும் இடங்களும், நீதிமன்றத்தில் காட்டும் அப்பாவித்தனமும், ஆடு , மாடு, பயிர்களை பிள்ளைகளாகவே நினைக்கும் அந்த உன்னதமும் , அது திரையில் வெளிப்பட்டிருக்கும் விதமும் , கண்களை குளமாக்கும் . அவரின் வாழ்க்கையில் ஒரு கிராமத்தின் வாழ்க்கையையும் , அதன் பிரச்சனைகளையும் காணலாம். . அப்பன் ஆதி சிவன், அவர் மாயாண்டி, மகன் ராமையா என்று லேயர்களும் படத்தில் உண்டு. , அவருக்கும் மயிலுக்குமான உறவும் அப்படியே
அடுத்து முருக பக்தரான விஜய் சேதுபதி. அவரின் கதாபாத்திரம் உண்டு செய்யும் அதிர்வலைகளை சொல்லினால் அடக்கி விட முடியாது. அந்த கதாபாத்திரத்தின் ஆரம்பமும் முடிவும் ஒரு உலக புகழ்பெற்ற சிறுகதையை போன்றது. அவர் சித்தரை சந்திக்கும் காட்சி, ஒரு அதி அற்புதமான காட்சி. வரும் நேரம் மிக குறைவு ஆனாலும் மனிதன் பின்னி எடுத்துவிடுகிறான்.
இயக்குனர் மணிகண்டன் - அவரது சிறந்த படம். ஆங்காங்கே அவர் வைத்திருக்கும் வசனங்கள் பிற்பாதியில் முழு அர்த்தத்தை கொடுக்கும். அதே போல, எவ்வளவு சிறிய கதாபாத்திரம் ஆனாலும் , அதற்கென்று மெனெக்கெட்டு அதற்கு ஒரு நல்ல முடிவையும் தருகிறார். நினைத்திருந்தால் எவ்வளவோ இடங்களில் நுண்ணிய அரசியலை புகுத்தியிருக்கலாம் , ஆனால் செய்யவில்லை. அதேபோல் இந்த படத்தை மெலோ ட்ராமாட்டிக் ஆக மாற்றி சோகத்தைப் பிழிந்து , எடுத்திருக்க முடியும், அதையும் செய்யவில்லை. கிளைமாக்ஸ் அருகில் வரும் காட்சி ஒரு உதாரணம், நம் கண்கள் அவ்விடத்தில் நிறைந்தே தீரும். ஆனால், அவர் எல்லாவற்றிலும் உள்ள நல்லதை பெரிதாக காட்டி , அதில் பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
படம் பார்த்து இரு நாட்கள் கடந்தும் என்னை ஆட்கொண்ட படங்களில் இதுவும் ஒன்று. இது இந்த வருடத்தின் மிக சிறந்த படம், தேசிய விருது உறுதி, தராவிட்டால் அதற்கு தான் அசிங்கம்.
இரண்டே முக்கால் மணி நேரம் தான் படம் எடுப்பேன் , பாபி சிம்ஹா இருக்கவேண்டும் , பழைய கார் ரெண்டு என்று predictable ஆக மாறி வருகிறார் கார்த்திக் சுப்பாராஜ்.
பல இடங்களில் ஜிகர்தண்டா வும், ஜகமே தந்திரம் ஞாபகம் வருகின்றன, நல்ல விதமாக அல்ல. விக்ரம் இருப்பதால் பிழைக்கிறோம். பாபி சிம்ஹா, ஏனோ ஒட்ட மறுக்கிறார்.
அரசியல்வாதி கேரக்டரில் வரும் வேட்டை முத்துக்குமார் ( சார்பேட்டா மாமா), சனத் தன் பங்கை செய்கிறார்கள்.
நீளம் படத்தின் மிகப்பெரிய மைனஸ். இரண்டு மணி நேரத்தில் எடுத்து முடிக்க வேண்டிய படத்தை, இழுத்து ஒரு வழி பண்ணி விட்டார்கள்.
தப்பு செய்ய தடுக்கும் சுதந்திரம், சுதந்திரமே அல்ல என்று காந்தி சொன்னாராம். அதை வைத்து விக்ரம், தம், தண்ணி , கொலை என்று எல்லாம் செய்கிறார். ரேப் ஒன்று தான் மிச்சம் :(.
மற்றபடி -
விக்ரம்- ஈர்க்கிறார்
சிம்ஹா - ஓகே
சுப்பாராஜ் - இன்னும் எடிட்டிங் தேவை
துருவ்- சம்திங் மிஸ்ஸிங்
சிம்ரன் - "எப்படி இருந்த சிம்ரன் இப்ப சவுக்கார் ஜானகி மாதிரி ஆக்கிடீங்க"
தினமும் காலை மாலை வரும் செய்திகளை பார்த்து வருத்தப்படுபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கானது
நம்மை சுற்றி நிறைய நெகடிவ் சக்திகள் இருக்கின்றன , உதாரணத்திற்கு
ஜி அதை நொட்டுவார் இதை நொட்டுவார் என்று மார்தட்டி, சைனாவிடம் அரை கிலோமீட்டர் விட்டுக்கொடுக்கும் கும்பல்
"ஆக" எங்க ஆள் ஏன் பிரதமர் ஆக கூடாது என்று வெட்கமே இல்லாமல் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும் கும்பல்
பப்பு பப்புனு கிண்டல் பண்றீங்களே , நாடாளுமன்றத்தில் “மெய்ன் தமிழ் ஹூன்” அப்படினு கர்ஜித்தார் தெரியுமா என்று கட்சியில் மிச்சம் இருக்கும் நாலு பேரின் வேட்டியை உருவும் கும்பல்
அடங்க மறு , சொறிஞ்சி விடுனு ஊருக்கு வெறி ஏத்தி விட்டு , கடைசியில் "அவர்களிடம்" செருப்பணியாமல் சென்று, கைகட்டி பம்மும் அந்த கும்பல்
ஏசு நாதர் என் ப்ரெண்ட் தான் -- புஹா ஹா ஹா என்று மூக்கை நோண்டும் கும்பல்
கையில் சட்டியை வரைந்து , குடிசையை பார்த்தால் கை நமநமக்கும் மங்குனி கும்பல்
கோபாலபுரம் மற்றும் ஜி போடும் பிஸ்கட்டுக்கு செய்தி சொல்லும் வீச்சு கும்பல்
அதாவது பீலிக்ஸ் என்று முந்தாநாள் அடித்த போதையில் கண்டபடி வன்மத்தை காக்கும் கும்பல்
நான் கோட்சேவின் பேரன் என்றொரு துடைப்ப குச்சி , மாணவர்கள் புரிஞ்சுக்கனும் என்று வாய் வழியே ஆய் போகும் கும்பல்
இவர்களிடம் இருந்து இரண்டு நாள் தள்ளி இருந்து பாருங்கள். இதையெல்லாம் விட்டு விட்டால் போர் அடிக்குமே என்று யோசிக்க வேண்டாம். இருக்கவே இருக்கிறார் நமது ஆபத்பாந்தவன்.
கடா மீசை வைத்து , காடுகளை அழித்து, யோகியை வைத்து வியாபாரம் செய்யும் அயோக்கியனல்ல அவர். கேமரா இருந்தாலும் , அது தெரியாமல் அழகு நடிகைகளுடன் மெத்தையில் குட்டிக்கரணம் அடிக்கும் அப்பாவி அவர் .
குண்டலினி சக்தியை எழுப்புகிறார் என்று புரட்டுகளை பரவ விட்டு நற்பெயரை கெடுக்க ஒரு கூட்டம் இருந்தது . அதற்கும் இருமுறை தம் கட்டி குதித்து பார்த்து குண்டலினி சக்தி எல்லாம் என் குசுவிற்கு சமானம் என்று சிரித்த முகத்துடன் அடுத்த கப்சாவிற்கு தாவுபவர் அவர்.
ஆமை கறி சாப்பிட்டு , அறுபதாயிரம் பேரை ஷேர் ஆட்டோவில் அழைத்து சென்று போர் புரிந்தேன் என்று மூக்கில் தங்கம் தேடும் அற்பி அல்ல அவர் .
தனக்கொரு பிரச்சினை, தன்னை சார்தொருக்கு ஓர் பிரச்சனை என்றதும் , தனி நாடு கண்ட தங்கம் அவர் .
அவர் - கைலாச தேசத்தின் சிற்பி , ரஞ்சிதாவின் மனம் கவர்ந்த குப்பி .
பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி என்று சகலத்திலும் , சமகால விஞ்ஞானிகளுக்கே சவால் விடும் அவரை அடுத்த நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கிறேன் .
I don’t know when i had my first haircut, i bet i would have cried during my first haircut. For me haircut is one thing we do on regular basis(long haired folks step aside). Haircuts varies with our age,
childhood - we cry. Teenage - confusion on choosing the right style and whatever style we choose we always end up with our parents scolding.
College age - we follow the trend , blindfold we follow what ever that is top of trend and we really never care whether it suits us .
Pre Marriage age - we cautiously cut our hair since the hair fall on its peak. Whatever style our friends praised during college period continues here.
After Marriage - haircutting time comes down exponentially due to non availability of hair on head and some people expects discounts for hair cuts for the above reason .
After children - you go to saloon with your kids and once their haircut is done after long struggle we sit and after 5mins of haircut and 45 mins of hair dye we go out with our still crying child.
Today... At the edge of our hope, at the end of our time, we have chosen not only to believe in ourselves, but in each other. Today there is neither a man nor woman in here that shall stand alone. Not today.
Today we are Cancelling the apocalypse!
The line:
It was dawn and winter was coming, people don’t get on to the streets at this time, but there was a huge crowd on that area and they were on lines already! The line was on NYC’s 5th avenue and the autumn-fall air was getting chillier as winter. Those lines directly lead to a glass building. That day it looked like all those lines leads to that glass building. At 7AM there were hundreds in the line already, there were people who dressed on the night pants, in suits, with night beds and chairs and dogs and cats and food and...... Lots of camera men are running here and there to get pictures of those people and people in turn are taking pics of those camera men in turn with their smart phones. Crazy world!
Our guy stood on the 2nd place and was very disappointed with that position, though he came in last night imagining that he would be number 1, he got the next place after a Korean or Chinese guy on that first (they both look like same). Still his eyes were eagerly searching for that one tight suited guy. He was looking all 360 degrees so that he won’t miss him and it would be cruel to miss him. He came in at fifteen past 7 and went directly to our guy and handed over 7 $100 bills (1st place would have added 3 more bills) and casually our guy slipped out of the line and the tight suit guy took 2nd position in line. No one uttered a word. This was better than last time, our guy thought.
Our guy was laughing at himself and went straight to a hot dog shop and then to a coffee shop. Then he started walking towards that line and this time he was smiling at all the other folks. After 5 minute walk he went to the same line and took the last place happily. The bell rang 8AM and people are getting crazier by seeing all those blue t shirted Yankee wankies coming out of that glass building. Our guy had the best hot dog ever that day and was still smiling, as the time passed by people were flocking towards that line and there were a hundred people behind him as well. To pass the time, he started counting the folks on that line and at the time he counted the last one it came around 1417 and there was a loud voice coming in from that glass building, and they were counting down something, 5...4...3....2...1.....YAY!!!!
People thrust inside the store as if they are going to meet Jesus H Christ on that building. The tight suit guy was all on smiles to enter the store as second and happily left in another 5 mins with the same smile. Our guy was moving along the line as a giant anaconda after a heavy breakfast. The line started moving faster and by 9.20 he was inside. He directly went to one blue tee guy and told him what he needs. He had exactly $50 before that tight suit came in and now he has $745 on his hand. The blue tee came up with a black rectangle box which was having a rectangular slab picture on its front with a grid of iCons, oh yeah those people call it as Apps. He was smiling again at his sheer brilliance. This is how our guy bought an iPhone 5s same as the iPhone 4 two years ago (though he got only 4 $100 bills that time and had to pay the remaining last time )
The place was Apple Store 5th Avenue and the date was September 20th 2013.
And so goes our guy’s story ,back and forth as his taste for new technology is never getting older.
Our guy wokes up every day at 6am just to see the alarm watch which is set up for 8am and sleeps happily there after, but not today. Today its different. The first sight he can remember is coming out of his 10year old apartment with a smile on his face.
He saw the evening sun setting down and a aircraft coming that way towards him. Its not a normal one, it has two turbines in the shaped of rectangular boxes and diagonal stripes on them. He has never seen one such.military one?may be.But one of those turbine is spitting smoke and the elevation of the aircraft is decreasing steadily. God, these dreams seem very true.
CUT.
Hell broke loose.
He was hiding behind a container. Looking for his friend. Lot of explosions around and lot of crazy airplanes coming down. People are staying inside the container boxes and already cooking is on. Those who came out are no humans.
CUT.
He was storming through the container boxes now altered,like home and searching for his friend. He heard another explosion , this time very nearby and could see his body burning. He trembled , some part of his brain says its just a dream , but it hurts, really really hurts.
This series will explain the key differences between AWS and Azure services, in part 1 , tried to cover the key terminologies used and where the infrastructure services/servers are actually hosted
If you are looking for what cloud computing means(this article is not for you!) -anyways, here is a quick summary for you from AWS:
What is cloud computing?
Cloud computing is the on-demand delivery of IT resources over the Internet with pay-as-you-go pricing. Instead of buying, owning, and maintaining physical data centers and servers, you can access technology services, such as computing power, storage, and databases, on an as-needed basis from a cloud provider like Amazon Web Services (AWS).
State of the Cloud
AWS is #1 – AWS is a clear Leader, as a first mover it still leads the pack
Azure is #2 : Azure had a lot of catching up to do , but using its enterprise strength and strong office 365, they were able to quickly catch up and become a almost close second
and Google or GCP is #3 : GCP is at a distant third, though they have way more knowledge on how to run a highly scalable and fault tolerant architectures, given the fact that they never had a strong enterprise thought process and their history with shutting down projects , the word on street is that their support is not so great and they come in distinct 3rd!
There are other players like Oracle and regional behemoths like alibaba who are playing catch up games!
So for the first part of this series, we will get started with where the top two contenders are located and how their infrastructure is setup!
So lets get started..
Typically cloud providers operate across the world! and both AWS and Azure have grown to a place where they have services almost everywhere..
It has 24* regions and it almost covers every corner of earth! each and every region almost surely has at least 2 availability zones all connected via dedicated networking..
AWS has something like
Regions
Availability Zones
Edge Locations
Key Terminologies
Regions are places where AWS has at least two or more availability zones – Each AWS Region is designed to be isolated from the other AWS Regions
Availability Zones or AZ’s or datacenters are the actual physical locations where the servers are hosted
Edge Locations : To deliver content to end users with lower latency, Amazon Cloud Front uses a global network of 217 Points of Presence (205 Edge Locations and 12 Regional Edge Caches) in 84 cities across 42 countries
A Local Zone is an extension of an AWS Region that is geographically close to your users.
Along with these there are many other services that AWS provides..
Also all these information tend to change every day, for example, look at the above picture , there are 3 announced regions and many more might be in the pipeline.. also there are additional zones like a local zone or a even a wavelength Zone etc!
Now lets move over to Azure!
Azure Infrastructure
Azure follows almost the same structs as AWS however differs in some areas!
Now if you compare it with AWS, you can see that there are additional layers on azure network , so lets see everyone!
Geographies: This can be tagged under , the continent the regions lie in (or An Azure geography defines an area of the world containing at least one Azure region), for example, Azure has 4
Americas
Europe
Asia Pacific
Middle East and Africa
RegionalPairs : A regional pair consists of two regions within the same geography
Regions: An Azure region consists of a set of data centers deployed within a latency-defined perimeter and connected through a dedicated low-latency network.
AvailabilityZones: Availability Zones are physically separate datacenters within an Azure region.
Availability Sets: allows workloads to be spread over multiple hosts, racks but still remain at the same data center;
கதை வேண்டும் என்று கேட்ட மகளிடம் எழுதிக்கொண்டிருக்கும் சரித்திர நாவலின் , போர் அத்தியாயம் ஒன்றை சொன்னேன் .யானைகளுக்கு அடிபடும் இடம் வந்ததும் , அவள் முகம் மாறியது.
கதை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தாலும் , மகளின் கவனமெல்லாம் அடிபட்ட யானையின் மீதே இருந்தது . கதையை பாதியில் நிறுத்தினோம்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் டாக்டரை கதையில் வரவழைத்தோம். டாக்டர் யானைக்கு மருந்து போட்டு, அதன் காயம் ஆறிய பின்னரே , நிம்மதியுடன் தூங்க சென்றாள்.
எதிர்காலத்தில், ஆறுகள், கடல்கள் எல்லாம் வற்றிப் போய் மனிதர்கள் தண்ணீருக்காக அலைந்து திரியும் காலம் வருகிறது. வழக்கம் போல வசதியானவர்களுக்கு நல்ல தண்ணீரும், இல்லாதவர்களுக்கு மட்டமான தண்ணீரும் ரேஷன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. செல்லப்பிராணிகளுக்கு இடம் இல்லை. என்னடா இது, மேட் மேக்ஸ் பட போல இருக்கிறதே என்ற நினைப்பு வரலாம். ஆனால் நாம் பார்க்க இருப்பது “தி சைலன்ட் சீ “ என்ற கொரிய சீரிஸ் பற்றியது. நெட்பிலிக்ஸில் வருகிறது.
கொரிய நாடகங்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளை அடிப்படியாக கொண்டவை. அங்கிருந்து வரும் ரொமான்ஸ் நாடகங்களுக்கு இங்கே பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அவர்களும் முக்கால்வாசி 2கே கிட்ஸை குறி வைத்தே நாடகம் எடுப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த சீரிஸ் கண்ணில் பட்டது. இது சயின்ஸ் பிக்சன் என்பதனால் கவனத்தையும் ஈர்த்தது. சரி பார்க்க ஆரம்பிப்போம் என்று ஆரம்பித்து முடித்துவிட்டேன்.
சயின்ஸ் பிக்ஷன் கதைகளுக்கு என்று ஒரு டெம்ப்ளட் உண்டு. ஏதோ ஒரு பிரச்சனை, அதை சந்திரானிலோ , செவ்வையிலோ கிடைக்கும் ஒரு வஸ்துவை வைத்து தான் தீர்க்க வேண்டும். அதற்கு ஒரு குழுவை சேர்ப்பார்கள். அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பின் கதை. அதன் காரணமாக அவர்கள் அதில் சேருவார்கள். அவர்களுக்கு முன் சென்றவர்கள் பெரிய விஷயம் ஒன்றை கண்டுபிடித்து இருப்பார்கள். பின்னர் ஒன்று காணாமல் போயிருப்பார்கள்; அல்லது மண்டையை போட்டிருப்பார்கள். அவர்களை கண்டுபிடிக்க இவர்கள்.
இங்கும் அதே கதை தான், தண்ணீரை மையமாக வைத்திருக்கிறார்கள். என்ன தான் எடுத்த கதையையே எடுத்தாலும், சில சமயங்களில் டீடைலிங் , வலுவான திரைக்கதை அல்லது கதாபாத்திரங்களின் நடிப்பு என்று ஏதாவது ஒன்றை வைத்து ரசிக்கும் படி செய்துவிடுவார்கள் .
அதிகார வர்க்கம், தன வாசத்துக்கு என்னென்ன செய்யும் என்பதையும் ஆங்காகே காட்டியிருக்கிறார்கள். எங்கே எந்த பிரச்சனை வந்தாலும் , முதலில் தப்பிப்பது அவர்கள் தான். மொத்தத்தில் அடிபடும் இனமாகவே பொது ஜனம் இருக்கிறது என்பதையும் போகிற போக்கில் சொல்லியிருக்கிறார்கள். தண்ணீர் எனும் ஒரு ஆதார பொருள் இல்லையென்றால் நம் டப்பா எப்படி டான்ஸ் ஆடும் என்ற நினைப்பே திகைப்பை தருகிறது. அதுவே இந்த சீரிஸையும் பார்க்க வைக்கிறது.
இந்த சீரிஸ் கதை இது தான். பயப்பட வேணாம். ஸ்பாய்லர் இல்லை. உலகெங்கிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட, நிலாவில் இருக்கும் ஒரு விண்வெளி மையத்தில் இருந்து முக்கியமான ஒரு பொருளை எடுத்து வர வேண்டும். அதற்கென ஒரு குழு வரவழைக்கப்படுகிறது. நாயகன் தன் மகளுக்காக வருகிறான். நாயகி நிலாவில் இறந்து போன தனது தங்கைக்காக, இன்னபிறர் அவரவர் அஜெண்டாகளுக்காக. சந்திரனை அடைந்ததில் இருந்து அவர்களுக்கு அதிர்ச்சிகள் சில காத்திருக்கிறது. அதை மீறி வந்த காரியத்தை முடித்தார்களா, இல்லையா என்பது தான் ஒன் லைன் கதை.
கொரிய நாடகமாக இருந்தாலும், நல்ல கிராபிக்ஸ் , நடிப்பை தந்திருக்கிறார்கள். வெறி கொண்டு ஒரே நாளில் பார்க்கும் அளவிற்கு நல்ல சீரிஸ் இல்லை. அதே நேரம் சஸ்பென்ஸ் வைத்து எப்படி எடுக்கலாம் என்றும் செய்து காட்டியிருக்கிறார்கள். கொரோனா உக்கிரமாக ஆறாவது முறையாக அடிக்க வந்திருக்கும் இந்த நேரத்தில் பொழுது போகாமல் இருந்தால் இதை பார்க்கலாம்.
எந்திரன் படத்தின் மூலம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிலேயே நம்பர் 1 நடிகர் தான் தான் என்பதை நிரூபித்தார் ரஜினி. சம்பளத்தில் நம்பர் 1, வசூலில் நம்பர் ஒன் என, ஆசியாவின் ஜாக்கி சானுக்கே சவால் விட்டார். கணக்கிலடங்கா ரெக்கார்டுகளை படைத்த படமாக இன்றும் பேசப்படுகிறது எந்திரன் திரைப்படம். இந்தப் படம் கொடுத்த உத்வேகத்தில் அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்தார். தனது ஆஸ்தான இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் அவர்களுக்கு போன் போட்டு வரவழைக்கிறார். அவரை அழைக்கவும் ஒரு காரணம் இருந்தது. என்னதான் என்கிற ஒரு வெற்றிப் படமாக இருந்தாலும் இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த் அவர்கள் செலவு செய்த காலம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள்.
அதேபோல் நாம் ஏற்கனவே கூறியதைப் போல ஒரு பெரிய படம் செய்துவிட்டது அடுத்ததும் பெரிய படம் செய்வது என்பது ரஜினிக்கு பிடிக்காத விஷயம். அதைத் தாண்டியும் ஒரு விஷயம் உள்ளது. பாபா படத்திற்கு பிறகு அவரது குடும்பத்தை சினிமா வணிகம் பக்கம் சேர்க்காமல் பார்த்துக் கொண்டார் ரஜினி. அதை இன்று வரை லதா ரஜினிகாந்த் அவர்கள் கடைபிடித்து வருகிறார் .
ஆனால் 2007 ஆம் ஆண்டு சௌந்தர்யா அவர்கள் ரஜினியை வைத்து சுல்தான் தி வாரியர் என்று அனிமேஷன் படத்தை இயக்க முற்படுகிறார். சௌந்தர்யா அவர்கள் அனிமேஷன் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பதனாலும் ரஜினியால் அவரது மகளின் மீது உள்ள பாசத்தினாலும் தட்டிக் கேட்க முடியாமல் ஓகே சொல்கிறார். ஆனால் எந்திரன் முந்தியதால் அந்தப்படம் அப்படியே ஒதுக்கி வைக்கப்படுகிறது.
சௌந்தர்யா எடுக்க நினைத்த படத்திற்கு தேவையான தொழில்நுட்ப வசதி இந்தியாவில் அப்போது இல்லை, அதனால் அந்த படத்தை டிராப் செய்கிறார்கள்.
அடுத்து கே எஸ் ரவிக்குமார் அழைக்கிறார் ரஜினி. பதினேழாம் நூற்றாண்டு கதை ஒன்று உள்ளது , அதற்கு நீங்கள் திரைக்கதை எழுதி இயக்க முடியுமா என்று ரஜினி கேட்க, கே எஸ் ரவிக்குமார் ஓகே சொல்கிறார் .அப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் “ராணா” என்ற அந்த படம்.
இது ஒரு பீரியட் பிலிம் என்பதனால் இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கும் அதனால் ஒரு டெக்னிக்கல் டைரக்டராக உள்ளே நுழைகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். கதை வளர வளர இது சின்ன பட்ஜெட்டில் எடுக்க போகும் படம் என்ற எண்ணம் போய் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படமாக மாறுகிறது. எந்திரன் அதிரிபுதிரி ஹிட் என்பதனால் இந்த படத்தின் பட்ஜெட் அதை விட குறைவாகத்தான் இருந்தது.
பெரிய பட்ஜெட் படம் என்பதால் அவர் நடிக்கிறார் அவர் நடிக்கிறார் என்று வதந்தி கிளம்பி அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறார் ரவிக்குமார். படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறது. ரஜினிக்கு இதில் மூன்று வேடங்கள் . அதில் ஒருவர் பட்டத்து இளவரசர். அவர் ராஜ தோரணையில், கையில் வாளுடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி பரபரப்பை கிளப்புகிறது. எந்திரன் படத்தை விட்ட ஈராஸ் நிறுவனம் தயாரிக்க முன் வருகிறது.
அதன் பிறகு நடந்ததே வேறு.
ஏப்ரல் 2011 இறுதியில் ரஜினிக்கு உடல்நிலை குன்றி, அடிக்கடி மருத்துவமனைக்கு செல்கிறார். முதலில் நார்மல் பிரச்சனை என்று செய்தி வர ஆரம்பித்து, பின்னர் டயாலிசிஸ், லிவர் என்று பிரச்சனைகள் பெரிதாகிக்கொண்டே போகிறது. அவர் icu விற்கு மாறிய தகவல் காட்டுத்தீ போல பரவுகிறது. மருத்துவமனைக்கு முன் தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர் கூட, போரூர் பகுதி ஸ்தம்பிக்கிறது. கலைஞரே வந்து நேரில் பார்க்கிறார். மோடி, சந்திரபாபு நாயுடு என்று இந்தியாவின் முக்கியஸ்தர்கள் அனைவரும் வருகிறார்கள். ஜெயலலிதாவே குசலம் விசாரிக்கிறார். இதன் பிறகும் இங்கேயே இருந்து பார்க்க வேண்டுமா என்று ரஜினியின் குடும்பத்தார் எண்ணுகிறார்கள்.
கடைசியாக மே இறுதியில் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து சிங்கப்பூருக்கு அவர் மாற, தமிழகமே சோகத்தில் ஆழ்கிறது. ரஜினி சிங்கப்பூர் செல்வதற்கு முதல் காரணம், அமிதாப். அவர் கொடுத்த அறிவுரையின் படியே ரஜினி அங்கே செல்கிறார். தினமும் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு முன் நின்ற ரசிகர் கூட்டம், செய்வதிராது திகைக்கிறது.
தனது ஆஸ்தான நாயகன் என்பதை தாண்டி, தமிழர்களுக்கு ரஜினிக்கு இருக்கும் வசீகரத்தால், அவரது உடல்நிலை தினசரி தலைப்பு செய்தியாகிறது. அதோடு வதந்திகளும் கொடி கட்டி பறக்கின்றன. ரஜினி நீண்ட காலமாக புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர். மதுவும் கூட, இவையெல்லாம் கலந்து, ரஜினி அவ்வளவு தானா என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறது. அல்லது கிளப்படுகிறது.
இவை சாதாரண ரசிகனுக்கு மிகுந்த சோகத்தை தர, அவன் கோவிலுக்கும் , தேவாலயத்திற்கும் நடையாய் நடக்கிறான். அலகு குத்தி வேண்டுகிறான். மண் சோறு சாப்பிட்டு வேண்டுகிறான். ஒரு பக்கம் ரசிகர்கள் இப்படி என்றால், திரை உலகிலும், இயக்குனர்களும், துணை இயக்குனர்களும் அவர்கள் பங்குக்கு பிரார்த்திக்கிறார்கள். ஆயிரம் தான் மருத்துவ வசதிகள் முன்னேறினாலும், 61 வயதும், அவர் பழக்கங்களும், ரஜினிக்கு எதிராக இருந்தன. சிங்கப்பூரின் உலக பிரசித்தி பெற்ற எலிசபெத் மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை நடக்க, இங்கே வதந்திகள் உச்சத்தை எட்டின. அவர் நல்லபடியாக இருக்கிறார் என்று யார் சொன்னாலும் நம்ப மறுத்தது ஒரு கூட்டம். கடைசியாக அவர் குரலில் வந்த ஆடியோவால் தமிழகம் நெகிழ்ந்தது . அதே நேரத்தில் அது அவரே இல்லை, மயில்சாமியை பேச வைத்து வெளியிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவின.
சிங்கப்பூரிலேயே ஒரு மாத காலம் இருந்து விட்டு சென்னை திரும்பினார். அவரை ஏர்போர்ட்டில் வந்திறங்கியதும் ஒரு உணர்ச்சிவசப்பட கூட்டம் கண்ணீர் வடித்து வரவேற்றது. ரசிகர்கள் வேண்டுதல் செய்ததால் தான் பிழைத்தேன் என்று ரஜினி கண்ணீர் மல்க கூறினார். , அந்த ஒரு வார்த்தைக்காக காத்து கிடந்த, ரசிகர் கூட்டம் நிம்மதி பெருமூச்சு விட்டது.
இதோடு ரஜினியின் திரை வாழ்க்கை ஓவர் என்று அவர் காதுபடவே ஒரு கூட்டம் பேசியது. ரசிகர்கள் அவர் நலமுடன் இருந்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருந்திருப்பார்கள் .
ஆனால் வாழ்க்கைதான் எவ்வளவு சுவாரஸ்யமானது? பிரச்னையை கண்டு துவண்டு விழும் நபரா ரஜினி? ஆனாலும் இந்த முறை அடி ஜாஸ்தி. அடுத்து என்ன செய்ய போகிறார் என்று ரசிகர்கள், திரைத்துறையினர், ஏன் இந்திய மக்களே எதிர்பார்த்தார்கள்.
குசேலன் படத்தால் ரஜினிக்கு பல கஷ்டங்களே மிஞ்சியது. அதை துடைக்கும் விதமாக அடுத்த படத்தை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று மும்முரமாக இயங்க ஆரம்பித்தார். படம் ஆரம்பிக்கும் போதே இந்த படம் நடக்குமா என்ற சந்தேகங்களையும் கிளப்பியது. காரணம் , இதே கதையை அரை டஜன் ஹீரோக்களிடம் ஷங்கர் ஏற்கனவே சொல்லி ஒவ்வொரு முறையும் நடக்காமல் போனது தான் . இங்கே கமலஹாசனில் ஆரம்பித்து, விக்ரம் வரை இந்த கதையை சொல்லி வைத்திருந்தார். அதே போல பாலிவுட்டில் அமீர் கான், ஷாரூக் கான் போன்றோருக்கும் சொல்லியிருந்தார். ஷங்கருக்கு நோ சொல்லிவிட்டு, அதே கதையமைப்பில் ரா ஒன் என்று வேறொரு படம் நடித்தார் ஷாரூக் என்பது உபரி தகவல்.
அடுத்ததாக, ரஜினியை வைத்து எடுக்கப்படும் படம் என்றாலும், அதிரி புதிரி பட்ஜெட்டில் தயாராகும் படம் என்பதால், ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஐங்கரன் என்று இரு நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தனர்.
அதோடு, ரஜினி என்பதனால் சில கூடுதல் சிக்கல்களையும் இந்த கதை சந்தித்தது. இந்த படம் ஆரம்பித்த 2008 ஆண்டில், ரஜினிக்கு வயது 58. சர்கார் உத்தியோகத்தில் இருந்திருந்தால் வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். இந்த வயதில் அவரால் என்ன செய்ய முடியுமோ அதற்கு தகுந்தாற்போல் கதையை மாற்றினார் ஷங்கர் . அதிலும் ஒரு சிக்கல் வந்தது.
முதல்வன் படத்தில் இருந்து, சுஜாதாவுடன் பணியாற்றி வந்திருந்தார் ஷங்கர். அதன் பிறகு வந்த படங்களில் வசனம், ஸ்கிரிப்ட் திருத்தம் , லாஜிக் மீறல்களை எப்படி அமுக்குவது போன்றதில் சுஜாதாவின் தலையீடு அதிகம். உதாரணமாக, சிவாஜி படத்தில் வரும் கருப்பு பணத்தை பற்றி வரும் பகுதியை பாமரனுக்கும் கொண்டு சேர்ந்ததில் பெரும் பங்கு சுஜாதாவிற்கு. சுருக்கமாக சொன்னால் ஷங்கர், சுஜாதா ஒரு ஹிட் காம்போ. எந்திரன் படத்திற்கும் அவர் வசனகர்த்தாவாக சேர்க்கப்பட்டார் . சுஜாதா ஏற்கனவே “என் இனிய எந்திரா” என்ற பெயரில் பிரசித்தி பெற்ற ஒரு நாவலை எழுதியிருந்தார். எதிர்காலத்தில் நடக்கும் கதை அது. அதில் ஒரு நாய்க்கு மனிதனை போல் பேசும் ஆற்றலும், உணர்ச்சிகளும் வந்து அட்டகாசங்கள் செய்யும். இப்படி அறிவியல் புனைகதைகளில் நிபுணரான சுஜாதா இந்த படத்தில் என்ன செய்யபோகிறர் என்று அவர்களின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் நடந்ததோ வேறு. சுஜாதா அவர்களுக்கு திடீரென உடல் நல குறைவால் பிப்ரவரி மாதம் இறைவனடி சேர்கிறார். அவர் மட்டும் இருந்து இந்த படத்தை முடித்திருந்தால் , படம் வேறு விதமாக வந்திருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் மற்றவர்களை வைத்து படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார் ஷங்கர்.
ஷங்கருக்கு எப்போதும் சொன்ன தேதியில் படத்தை எடுத்து முடிப்பதில் சிக்கல் உண்டு. சிவாஜி படத்தையே ஒரு நாள் கழித்து தான் வெளியிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அதோடு, பரந்த பிரும்மாண்டமான சிந்தனைகள் கொண்டவர் ஷங்கர். சாதா படத்திலேயே காசு பிடிக்கும் பல அயிட்டங்கள் வைத்து, நம்மை வாயை பிளக்க வைத்து விடுவார். சாதா படத்திற்கே இப்படி என்றால், இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகவும் எந்திரனுக்கு எவ்வளவு செலவு பிடித்திருக்கும்? சுமார் 150 கோடி பட்ஜெட்டில் ஆரம்பித்த எந்திரன் அதன் தயாரிப்பு நிறுவனங்களையும் பதம் பார்த்தது. போதாத குறைக்கு 2008 ஆண்டில் அமெரிக்க நிர்வாகங்கள் சட்டென்று படுக்க, உலகம் முழுக்க பொருளாதார மந்த நிலை தலைவிரித்து ஆடியது. இதை காட்டி பட்ஜெட்டை குறைக்க தயாரிப்பு நிறுவனம் கேட்க, ஷங்கர் மறுத்துவிட்டார். 35 கோடி செலவில் ஏற்கனவே இரண்டு பாடல்களையும் முடித்து விட்டனர். ரஜினியின் படம் ட்ராப் ஆகுமா என்று செய்திகள் வர ஆரம்பித்தன.
ரஜினி எப்போதும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு தன்னால் முடிந்த தீர்வை கொடுப்பதில் வல்லவர். அவரின் படத்திற்கே பிரச்சனை என்றால் சும்மா விடுவாரா? 2008 இல் திமுக ஆட்சி. சன் பிக்சர்ஸ் மெல்ல திரைத்துறையை சுரண்ட ஆரம்பித்திருந்த தருணம். ரஜினி கலாநிதி மாறனுக்கு போன் போடுகிறார். சந்திப்பு நடக்கிறது. கலாநிதி மாறன் ஒரு தேர்ந்த வியாபாரி. 150 கோடி பட்ஜெட்டை தாண்டாமல் எடுத்தால் வெற்றி உறுதி என்று கணிக்கிறார். ஓடிடி / ஸ்ட்ரீமிங் போன்ற வஸ்துக்கள் இல்லாத காலம் அது. படம் வந்தால் தியேட்டரில் பார்க்கலாம், அல்லது திருட்டு விசிடி தான். இல்லையேல் அவர்களாக படத்தை டிவி சேனலில் போடும் பொழுது பார்க்கலாம். அப்படி அவர் கணக்கு போட்டு ஓகே சொல்ல படம் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது.
வயதின் காரணமாக ரஜினியால் படத்திற்கு தேவையான சண்டை காட்சிகளில் முழு சக்தியுடன் நடிக்க முடியவில்லை. இந்த வயதில் இந்த மனிதனை இவ்வளவு கஷ்டப் படுத்த வேண்டுமா என்ற முமுணுப்புகளும் எழுகிறது. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் டூப் போட்டு எடுக்கிறார்கள். இப்படி பல தடைகளை கடந்து படம் நத்தை வேகத்தில் நகர்ந்து ஒரு வழியாக முடிவடைகிறது. 150 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட படம், சுமார் 165 கோடி வரை இழுத்து விடுகிறது, ரஜினியின் சம்பளம் 45 கோடி, கிராபிக்ஸ் காஸ்ட் 60 கோடி ஷங்கருக்கு பத்து கோடி, ஏ ஆர் ரஹ்மானுக்கு சில கோடிகள் என்று இந்தியாவின் காஸ்ட்லியான படமாக மாறுகிறது.
பாடல்கள் வெளியாகி சில நாட்களில் ஹிட் ஆகிறது. படத்தின் எதிர்பார்ப்பை கூட்ட சன் டிவி ஐந்து கோடி செலவிட, புரமோட் செய்ய மலேசியா வரை செல்கிறார் ரஜினி. டீசர் செப்டம்பர் 2010 இல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்புகிறது. அதே நேரத்தில் இது என்னுடைய கதை என்று சில பேர் நீதிமன்றம் செல்கிறார்கள். அந்த வழக்குகள் 2022 வரை நடக்கிறது என்பது உபரி தகவல். 2010’ இல் நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க மறுக்க, படம் அக்டோபரில் ரிலீஸ் ஆகிறது.
தமிழ் திரையுலகம் அதுவரை கண்டிராத வெற்றியை அடைகிறது. முதல் வாரத்தில் மட்டும் 118 கோடி வசூல் என்று யாரும் நினைக்காத சாதனையை நிகழ்த்துகிறது. இந்தியாவிலேயே அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படமான, தபாங் படத்தின் முதல் வார வசூல் 85 கோடி தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தி பதிப்பில் மட்டுமே 30 கோடி வசூலித்து , ஒரு பாண் இந்தியன் ஹீரோவாக அந்தஸ்து பெறுகிறார் ரஜினி.
இந்த படம் செட் செய்த ரெக்கார்டுகளை பல வருடங்களுக்கு பிறகே பாகுபலி படம் உடைத்து.
குசேலன் படத்தால் துவண்டு போன ரஜினிக்கு மீண்டும் உயிர் கொடுத்தது இந்த படம். இவ்வளவு பெரிய வெற்றியுடன் ரஜினி நடிப்பதை நிறுத்தி இருந்தால், அதன் பிறகு நடக்கவிருக்கும் துன்பியல் சம்பவங்களிலிருந்து தப்பியிருப்பார் ரஜினி என்றே சொல்ல தோன்றுகிறது.