இந்த மண்ணில் இவர்களை போல யாருமில்லை ❤️

 கதை வேண்டும் என்று கேட்ட மகளிடம் எழுதிக்கொண்டிருக்கும் சரித்திர நாவலின் , போர் அத்தியாயம் ஒன்றை சொன்னேன் .யானைகளுக்கு அடிபடும் இடம் வந்ததும் , அவள் முகம் மாறியது. 

கதை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தாலும் , மகளின்  கவனமெல்லாம் அடிபட்ட யானையின்  மீதே இருந்தது . கதையை பாதியில் நிறுத்தினோம். 

அடுத்த ஐந்து நிமிடத்தில் டாக்டரை கதையில் வரவழைத்தோம். டாக்டர் யானைக்கு மருந்து போட்டு, அதன்  காயம் ஆறிய பின்னரே , நிம்மதியுடன் தூங்க சென்றாள்.  

இந்த மண்ணில் இவர்களை போல யாருமில்லை ❤️

கருத்துரையிடுக

0 கருத்துகள்