அப்பாவின் செருப்பு மிகப் பெரியது
சின்ன வயதில்
அவர் செருப்பில் கால் வைத்து
தத்தித் தத்தி நடந்தபோது தெரியவில்லை
என் வருமானம் அவர் சம்பளத்தை தாண்டியபோது
அவர் செருப்பு சின்னதாகத்
தெரிந்தது
இன்று அவர் இல்லை
அவர் செருப்பை என்னால் அளக்க முடியவில்லை
அவரைப் போலவே அவர் செருப்பும் மிகப் பெரியது
சென்று வா அப்பா