கூத்தாடிக்கு கொடி பிடிப்பேன்
தாண்டவகோனே
என் புள்ள குட்டி காணாபோச்சு
தாண்டவகோனே
—
தமிழ் பேசும் நல்உலகத்திற்கான மிகப்பெரும் கேவலம் , நடிகர்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பற்று. சில ஆண்டுகளுக்கு முன்புவரை நானும் ரஜினிக்கு அடிபொடியாகவும் , அவரால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்பினேன் . என் நல்ல நேரமோ தமிழகத்தின் நல்ல நேரமோ , ரஜினி ஜகா வாங்கி, ஷிஸ்டத்தை மாற்றாமலேயே ஒதுங்கி விட்டார். செவிட்டில் அறைந்தது அவர் அறிவித்த அன்று , முதல் நடிகரை, நடிகராக மட்டும் பார்க்க ஆரம்பித்தேன்! பிழைத்தேன் !
எம் ஜி ஆர் ஒருவர் தான்!
சிவாஜி கணேசன் தொடங்கி , பாக்கியராஜ், டி ராஜேந்தர் , சரத்குமார் இப்பொழுது கமலஹாசன் வரை வரலாறு ஒரே விஷயத்தை தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு படித்தறிந்த சமூகம்தான் கள்ளச்சாராயம் குடித்து மடிகிறது, நடிகரை பார்க்க முந்தியடித்து மரணிக்கிறது, என்பது தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு.
விஜய் மாற்றத்திற்கான ஒரு தூண்டுகோல் மட்டுமே, அவர், மாற்றமில்லை!