அந்த நகரமே , அரசர் இப்படிச் சொல்லிவிட்டாரே என்ற கலக்கத்துடன் , அன்று வேலைக்குச் சென்றது .
தினமும் 100 தங்கப் பொற்காசுகளைத் தயாரிக்க வேண்டும் என்பதே அரசரின் கட்டளை. நாட்டு மக்களைக் கொடுமைப்படுத்தி , சுகம் காணும் கொடுங்கோலர் இல்லை என்றாலும் , இப்படி இம்சை படுத்துகிறாரே என்று திட்டிக்கொண்டே வேலை பார்த்தனர்.
100 நாட்கள் ஓடின. அடுத்த நாள் அரசர் ,மக்களை நேராகக் கருவூலத்திற்குக் கூட்டிச்சென்றார். அங்கே மக்கள் தயாரித்த லட்சக்கணக்கான பொற்காசுகள் பெரும் மலைபோலக் குவிந்திருந்தன.
“நீங்கள் 100 நாட்கள் வேறு சிந்தனையின்றி செய்த வேலை, இந்த நாட்டிற்கும் , நம் வருங்கால சந்ததியினருக்கும் மிகப்பெரிய எதிர்காலத்தை உண்டு செய்து கொடுக்கப் போகிறது பாருங்கள்” என்றார் அரசர்.
கூட்டத்தில் ஒருவன் “அரசரே, தங்கக்காசுகளை இப்போதே எல்லோருக்கும் பிரித்துத் தந்து விடுவீர்களா , இல்லை நாளை வரட்டுமா“ என்றான்.
“உன்னிடம் இருந்தால் என்ன, என்னிடம் இருந்தால் என்ன, இங்கேயே இருக்கட்டும் ” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் “பாரா”ந்திரச் சோழர்.