ஓராண்டுக்குப் பிறகு எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பைத் தொடும் வாய்ப்பு முருகனுக்குக் கிடைத்தது . ஒரு முடியை எடுத்து , அதன் நூற்றில் ஒரு பகுதியை அதனுள் புகுத்தினான் . அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி, ஓர் அணுவை கண்டுகொண்டான்.
அந்த அணுவுக்குள் புரோட்டான், எலக்ட்ரான் எல்லாம் இருந்தன. அதில் ஒரு புரோட்டானை நோண்டிப் பார்க்கையில், அதனுள் குவார்க்ஸ் எனும் சிறு துகள்களைக் கண்டான் . அவனின் ஆர்வம் அதிகரிக்க,இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றான் . அதனுள் ஸ்ட்ரிங்ஸ் எனும் நூல்கள் அந்தரத்தில் மின்னியபடி மிதந்து கொண்டிருந்தன.
அவன் கண்கள் விரிந்தன. அவை சங்கேத மொழியில் பேசுவதாகத் தெரிந்தன. அவற்றை எடுத்து ஐரோப்பாவின் ஹார்டான் கொலிடேர் எனும் 27 கிலோமீட்டர் வட்டத்தில் ஒளி வேகத்தில் மோத விட்டான். அவை பேசுவது மின் துகள்களாக ஜொலித்தன. அதன் மொழியை அறிய, அவற்றை ஒரு சூப்பர் கம்ப்யூட்டரில் செலுத்தினான்.
முதல் ஸ்ட்ரிங் அடுத்த ஸ்ட்ரிங்கிடம் கேட்டது “ப்ரோ, நீங்க என்ன ஆளுங்க ப்ரோ