பாரந்திரச் சோழரின் பராக்கிரமங்கள் -4/100

 பாராந்திரச் சோழர்  நாட்டு மக்கள் அனைவரையும் மைதானத்தில் ஒன்று கூடும்படி அறிவித்திருந்தார்.  ஏற்கனவே 100 நாட்கள் பிழிந்து எடுத்ததைத் போல ,  இப்பொழுது என்ன செய்யப் போகிறாரோ என்ற பயத்துடனே குழுமினார்கள். 


நினைத்தது போலவே ,  “இனி இந்த நாட்டு மக்கள் அனைவரும் யவன மொழி கற்க வேண்டும் “ என்று அறிவித்தார். 


இது என்னடா புது வம்பா போச்சு,  என்று மக்கள் ஸ்தம்பித்து நின்றனர் . 


கூட்டத்தில் ஒருவன் சன்னமாகச் சொன்னான். “விஷயம் தெரியுமா? அரசருக்கு யவன நாட்டு இளவரசியின் மீது ஒரு கண். அவள் இங்கே  பேசிப்பழக சிரமப்படக்கூடாதே ! ” என்று கண்ணடித்தான் 


மக்களின் முணுமுணுப்பு அரசரின் செவிகளை எட்டியது. 


அரசர் பொய்க் கோபத்துடன் அறிவித்தார்  “இங்கே பெண் கிடைக்காமல் சுற்றித்திரியும் வாலிபர்களுக்கு யவன தேசம் பெண் தர முன்வந்துள்ளது , புரிகிறதா?”. 


மக்கள் ஆமோதித்தனர் .  


ஏதோ தன் சுயநலத்தில், பொதுநலமும்  இருந்ததால் தப்பித்தோம் என்று பெருமூச்சு விட்டார் . 


மணமான ஆண்கள் அரசரைச் சபித்தபடி அங்கிருந்து விலகினர் .




Views So far!