சமகாலங்களில் நான் ஒரு வாரத்திற்குள் படித்து முடித்த ஒரே நாவல். அதிகமாக அகராதியைத் தேடியதும் இதற்காகத்தான் இருக்கும்.
லா ச ரா வின் எழுத்து படிக்கப் படிக்க விஸ்தாரமடைகிறது. சில வாக்கியங்கள் நூறு சொற்களக்குக்கான அர்த்தங்களைத் தருகின்றன.
கதையாகப் பார்த்தால் மிகச் சிறியது தான் . ஆனால் அது எழுப்பி இருக்கும் கேள்விகள், காலங்கள் தாண்டி நிற்கக்கூடியவை.
கத்தி மேல் நடப்பதைப் போன்ற சூழல்கள். “தயவு செய்து எதையும் செய்துத் தொல்லைத்துவிடாதீர்” என்று பதற்றம் கொள்ள வைக்கும் இடங்கள். அவரே அதைத் தணிக்கும் விதங்கள் , என மனதை ஒரு திரிசங்கு நிலைக்குத் தள்ளிவிடுகிறார்.
ஆங்காங்கே தூவிக் கிடக்கும் நகைச்சுவை நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன. அபிதாவில் வரும் ஆண்கள் அனைவருமே ஏதோ ஒரு குறையுடையவர்கள். பெண்கள் அப்சர அழகிகள்.
படுபாவி லா ச ரா , கதையை இப்படி முடித்திருக்க வேண்டாம்.
மீண்டும் படிக்க வேண்டும். சக்குவை, சாவித்திரியை, அபிதாவை! எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் தமிழை!