Posted by
valaithinni
ச-க-ம-ப-த-நி-ச… என்ற ஆரோகணத்தில் ஆரம்பித்தது என் மாலை. மணக்கும் பொங்கலின் வாசத்துடன் அகடமிக்குள் நுழைய , எதிர்த்திசையில் தாத்தா நடந்தார். “அடடா இராவணா” என்று இழுக்க ஆரம்பித்தார் அங்கே பாடியவர் . அதிலிருந்து கொஞ்சமேனும் நகர்வார் என்று பார்த்தால் ம்ஹும் ! தாத்தாவோ “ பகுதாரியா , பலே ” என்றார். அரை நிமிடத்தில் இரண்டு ரீல் பார்க்கும் எனக்கு, இது இழுவையாகப்பட்டது. இருபது நிமிடத்தில், “இராவணா” முடிந்தவுடன் எழுந்த என்னை, தாத்தா தடுத்தார். “இன்னும் நிறைய இருக்கு , பொறு”. அடுத்து “ ப்ரோவபா ராமா ஆஆஆஆஆஆஆஆ ” என்று அவர் இழுத்ததற்கு, என் வயிற்றிலிருந்து வயலின் சத்தம் கேட்டது. தாத்தா பசிக்குது . பதிலில்லை . தாத்தா மேடையில் தியாகராஜரே வந்து ராமருக்குப் பாடியதைப் போல அசையாமல் இருந்தார். அடுத்த அஸ்திரத்தை ஏவினேன். ”தாத்தா மூச்சா வருது !” இதற்கு அவர் வந்தே ஆகவேண்டும்! வாராத மூச்சாவை அடித்து விட்டு, சபா கேன்டீனில் நுழைந்தோம்! ஞானசூனியம் என்று திட்டுவாங்கியபடி சாப்பிட்டேன். நமக்கும் பசிக்கும்மில்ல ..
- Get link
- X
- Other Apps