திடீர் கவிதைகள்

அரை நாள் சோர்வை , ஒரே சிரிப்பில் தகர்த்துவிட்டாள்!

கடுங்கோபம் கொண்டு திரியும் என்னை ஒரே முத்தத்தை வைத்து காலி செய்கிறாள்!

பாவனைக்காக அழுவதாக நடித்தால் அவளும் பதறுகிறாள்! 

விளையாடும் அரை மணிநேரமும் முடியவே கூடாது என்று கட்டளை போட்டு சிரிக்கிறாள்!

முடியாது என்ற வார்த்தையை அகராதியில் இருந்தே  அகற்றுவாள் போல ..

இவள் ராணியாகவே பிறந்தாலா இல்லை நான் தான் இப்படி வளர்கிறேனா? 

அவள் - மகள் 


இந்தியாவும் தாலிபானும்

மீண்டும் தாலிபான் ஆட்சிக்கு வந்து இருபது ஆண்டு காலம் பின்னோக்கி சென்றிருக்கிறார்கள். 


இவற்றை பற்றி படிக்க படிக்க, நாம் எவ்வளவு முன்னேறிய நாட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பே வருகிறது . அங்கே நடக்கும் பிரச்சனை இஸ்லாமிய பிரச்சனை அல்ல. ஏனென்றால்  அங்கே கொல்பவர்களும் இஸ்லாமியர்கள் - கொல்லப்படுபவர்களும் இஸ்லாமியர்களே. ஒரு நல்ல முஸ்லீம் - கெட்ட முஸ்லீம் சண்டையாக எடுத்துக்கொள்ளலாம். 




இஸ்லாம் ஒரு பிற்போக்கு மதம் என்று சொல்கிறார்களே, அதுதான் இதற்கு காரணமா?  பதிலாக ஒரு  முக்கியமான விஷயத்தையும் விவரிக்க வேண்டும் . அனைத்து மதங்களிலும் பிற்போக்கு தனம் இருக்கிறது. நமக்கு அடுத்தவரின் , அடுத்த மதத்தின் விதிகள் மட்டுமே  பிற்போக்காக  தெரியும்.  உதாரணமாக சாய் பாபா எந்த மதம் என்று தெரியவில்லை, ஆனாலும் வியாழக்கிழமை மட்டும் ஏன் ஸ்பெஷல்? பாபாவிற்கு வெள்ளிக்கிழமை பிடிக்காதா? இந்த பிற்போக்கு விஷயத்தில்  சில மதங்கள் முன்ன, பின்ன இருந்தாலும், பிற்போக்கு இல்லாத ஒரு மதத்தை பார்க்க முடியாது. . அப்படி ஒன்று இருந்தால், அது மதமாக இருக்க முடியாது.  


காரணம் ஒன்று தான், அனைத்து  மதங்களின் கட்டமைப்புகளும், விதிகளும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு  முன்னரே எழுதப்பட்டவை. இன்று அதை மாற்றும் அத்தாரிட்டி யாரிடமும் இல்லை.  இதனாலேயே ஜக்கி போன்றவர்கள் , தனி விதி செய்து  கல்லா கட்டுகிறார்கள். எதையும் நம்பும் ஒரு கூட்டம் இருக்கும் பொழுது எதுவும் நடக்கும் . 

 

சரி கதைக்கு வருவோம், ஒரு நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் இல்லாவிட்டால், என்னென்ன நடக்கும் என்பதற்கான அப்பட்டமான  சாட்சி இன்றைய ஆப்கானிஸ்தான். 


தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் தான் என்பதை போலவே  இருக்கிறது  ஆப்கானிய வரலாறு. முதலில், சோவியத் ரஷ்யா படையெடுப்பு , பின்னர் முஜாகிதீன், பின்னர் தாலிபான், அடுத்து அமெரிக்க பப்பட் ஆட்சி, கடைசியாக இப்பொழுது தலிபான் என்று மாறி மாறி அந்த தேசத்தை சின்னாபின்னமாகி வருகிறார்கள். மிக முக்கியமாக, அங்கே பெண்களுக்கு 1970களில் கட்டற்ற சுதந்திரம் கொடுத்திருந்த  நாடு இது என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 


"எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என்பதர்கான உதாரணம் இந்த தேசம். 


அப்படியே சற்று கிழக்கு நோக்கி வருவோம். பாகிஸ்தானுக்கும் - ஆப்கானுக்கும் மத ரீதியில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், அங்கே பெரிய மதவாத, தீவரவாத அச்சுறுத்தல் இருந்தாலுமே, ஆப்கனை  போல இல்லாமல், ஓரளவு வளர்ந்த தேசமாகவே இருக்கிறார்கள். நமக்கு பாகிஸ்தான் எதிரி என்பதனால், நம் சொந்த வரலாற்றுக்கு வருவோம். 


இந்தியா, இன்று வரை சந்திக்காத பிரச்சனைகளே இல்லை. முகலாயர்கள் படை எடுப்பில் ஆரம்பித்து , பிரிட்டிஷ் அடிமைகளாக இருந்து 1947இல் சுதந்திரம் பெற்றோம் . பிறகு  காங்கிரசின் சுமாரான பல ஆட்சிகளையும் , சூப்பரான சில ஆட்சிகளையும் பார்த்து , இடையில் தேவா கவுடா காமெடிகளையும் பார்த்து  , வாஜ்பாயின் ஆட்சியில் பூரித்து, மன்மோகன் சிங்க் ஆட்சியில் சில்லறையை சிதறவிட்டு பின்னர் அவரது அடுத்த ஆட்சியில் ஊழலால்  அசிங்கப்பட்டு, இப்பொழுது ஜி யின் ஆட்சியில் வந்து நிற்கிறோம்.


 நாம் எவ்வளவு தான் ஒரு ஆட்சியை , அல்லது கட்சியையோ விமர்சித்தாலும். எதிர்த்தாலும், இவர்கள் அனைவருமே இந்தியாவை ஸ்திரமான ஒரு இடத்தை நோக்கி நகர்த்தி  இருக்கிறார்கள். 1990 களில் நரசிம்மராவ், மன்மோகன் மட்டும் இந்தியாவில் உலகமயமாக்களையும் , லைசென்ஸ் ராஜ்யத்தையும் ஒழிக்காமல் இருந்திருத்தல், ஒரு வேலை இந்தியாவே ஆஃகானை போல மாறி இருக்கலாம். 

இங்கே இன்றும், டிமோகிராசி உள்ளது, வாக்கு போட்டே அரசாங்கம் அமைகிறது. குடிக்க தண்ணீர், பயணிக்க பேருந்து, ரயில், அனைவரின் கையில் செல்போன், தினமும் ஒரு ஜிபி டேட்டா , ஆயிரமாயிரம் யூடுப் சேனல் என்று சப்த சவுகரியங்களும் இருந்தாலும், நாம், உஷாராக இல்லை என்றால் நமது தேசமும் ஆஃகானிஸ்தானக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

கடவுள் தொடங்கும் இடம்

 


இன்று விநாயகர் சதுர்த்தி , facebook முழுக்க விநாயகர் படங்கள் , ஆங்காங்கே சில எதிர் வினைகள் , உதாரணமாக அவர் வடநாட்டு கடவுள் , இல்லை புத்தரை பூசி மொழுகி மாற்றி விட்டார்கள் என்று .. அனைவருக்கும் அவரது கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு , அதே நேரத்தில் எதிர் வினைகளையும் எதிர்பார்த்தே பேச வேண்டும் ! 


கடவுள் உண்டு என்றால் அணைத்து கடவுளும் உண்டு !

இல்லை என்றால் யாரும் இல்லை ! 


இவர்  ஒரு கற்பனை என்றால் அவர்கள் அனைவருமே கற்பனை தானே  ! 


நீ நம்பினால் அவனும் நம்புவான் , இல்லையேல் எவனும் நம்ப மாட்டான் ! 


இவர் ஒரு கட்டுக்கதை என்றால் , எதோ ஒரு விதத்தில் அணைத்து கடவுளும் கட்டுக்கதை தானே?  


ஒன்று இருக்கும் ஒரு லட்சம் கடவுளை வணங்கி மற்றவருக்கு உதவு ! இல்லை கடவுள் இல்லை என்று சொல்லி மற்றவருக்கு உதவு ! 


அது தான் கடவுள் தொடங்கும் இடம் !  

ஹோம் - சுகானுபவம்

 




He is not a nobody ,

He is somebody! 


Wait …


He is a somebody who is a god for somebody !! 


Home படத்தின் சாரம்சமாக நான் கருதுவது மேற்கூறிய வரிகளைதான் .


கண்களை குளமாக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டி படம் எடுக்காமல் எதார்த்த சினிமாவின் பயிற்சி பட்டறையாக இந்த படம் இருக்கிறது . 



ஓட்டு மொத்த படமும் இந்திரன்ஸ் எனும் ஒரு அற்புத நடிகரிடம் ஆரம்பித்து முடிகிறது . காரணம் அவரது தோற்றமா ,அல்லது உடல் மொழியா , இல்லை சின்ன சின்ன உணர்ச்சிகளை அவர் வெளிக்காட்டும் விதமாஇல்லை அவரின் அப்பாவிதனமான பாவனைகளா என்றே கண்டுபிடிக்க முடியவில்லை ! கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லவே வேண்டாம் (அது கமல ஹாசருக்கு மட்டுமே சொந்தம் ) ! ஏனென்றால் அவர் நடித்திருக்கிறார் என்றே என்னால் நம்ப முடியவில்லைமற்றவர்கள் பார்தார்களோ இல்லையோ , எனக்கு என் தந்தையை படமெங்கும் நியாபக  படுத்திக்கொண்டே இருந்தார் ! 


மலையாள சினிமா என்றும் உணர்ச்சி வெள்ளத்தை கட்டவிழ்த்து விடுவதில் முன்னோடியாகவே இருக்கிறது ! 

வாழ்க்கை ஒரு வட்டம் , இங்கே அற்புதத்தை நிகழ்த்தியவர் பலர் நம் அருகிலேயே , ஏன் நம் வீட்டிலேயே இருக்கிறார்கள் என்று  சொல்லும்  இந்த கதையில் , எந்த ஒரு குறையும்  கூற முடியாது


அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்ஒரு ஃபீல் குட் அனுபவத்தை அருவி போல தரும் இந்த படத்தை போல தமிழிலும் சில அற்புதமான படங்கள் வந்திருக்கின்றன , உதாரணமாக "தவமாய் தவமருந்து" - என்ன சேரன் அவரது வேலையை - அதாவது அதீத நடிப்பை தந்திருப்பார்அப்படி எதும் இல்லாமலேயே ஹோம் படம் நிறைவை தருகிறது . கிளைமாக்ஸ் ஒரு உணர்ச்சி பிரவாகம் என்று சொன்னால் மிகையாகாது


இந்திரனுக்கு  அவரது அப்பாவுடன் இருக்கும் அந்த பிணைப்பு , மகன்களை பார்த்து வரும் அந்த பெருமிதம் , அப்பாவியாக கேட்கும் கேள்விகள்புது மொபைல் வாங்கி கற்றுக்கொள்ள அவர் படும் பாடு என அனைத்தும் ரசிக்கும் படி இருக்கிறது . 


ஒரு மெளோடிராமடிக் படத்திற்கான இசையை கச்சிதமாக தந்துள்ளனர் இரண்டேமுக்கால் மணிநேரம் ஒடும் படமான இதில் , ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டாலும் , அதை கடந்து பார்க்க முடிகிறது . செல்போன் வந்ததில் இருந்து ஆரம்பித்த அத்தனை பிரச்சினைகளையும் பிரச்சாரமாக சொல்லாமல் ரசிக்கும் படி வைத்திருக்கிறார்கள் .


அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் ! இல்லை பாடம்




மீண்டும் தாலிபான் மீம்ஸ்




"காலை எழுந்தவுடன் படிப்பு,  பின்பு அனைவரையும் சிரிக்க வைக்கும் முயற்சியாக  ஒரு மீமு " இப்படிதான் என்னுடைய காலை பொழுதுகள் ஆரம்பிக்கின்றன , காரணம் "மீண்டும் தாலிபன் "! அமெரிக்காவில் இருப்பதனால் இப்படி ஒரு சௌகரியம் இருக்கும் என்று நினைத்தே இல்லை . தினமும் காலை 7-8 மணிக்கு "மீண்டும் தாலிபான்புதிய அத்தியாயம் வந்துவிடும் , படித்த உடனே மீமிற்கான சாராம்சம்  கிடைத்து விடும்ரொம்ப மெனக்கெட தேவையே இல்லை , பாராவே பத்துமீமிற்கான தகவல்களை ஆங்காங்கே  தூவி வைத்திருப்பார் , எடுத்து மீமினுள் சொருகினால் வேலை முடிந்தது


புக் பேட் நடத்திய அந்த பயிற்சி வகுப்பில் பாரா சொன்னது இதுதான் -"தினமும் எழுதி பழகுங்கள் என்று " , எழுதுவதற்கு அறிவு தேவை, அறிவை வளர்க்க படிக்க வேண்டும், தினமும் . அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இந்த தாலிபன் தொடர் ஆரம்பித்தது. முதல்  இரண்டு அத்தியாயங்கள் படித்ததும் , மீம் போடுவதற்கான ஆசை எழ, அதை செய்து பாரவிற்கு அனுப்பினால், அவர் உற்சாக  படுத்தும் விதமாக தினமும் போட சொல்ல, முதல் 61  அத்தியாயததிற்கான meme ரெடி. 


"மீண்டும் தாலிபன்" வந்ததனால் நடந்த  ஒரே கெட்ட விஷயம் , கபடவேடதாரி பின் தங்கி விட்டான். கோவிந்தனை போல ஒரு உத்தமனை என்ன  பாடு படுத்துகிறார் இந்த பாரா என்று  கடிந்து கொண்டே படித்து வந்த அந்த அனுபவம் பாதியில் தொங்குகிறது .. ஒரு வேலை மீதி இருக்கும் அத்தியாயங்களை படித்து அதற்கும் மீம் போட ஆரம்பித்தால் தான் சரி வரும் என்று நினைக்கிறன் ! 


இதுவரை வெளிவந்த - மீண்டும் தாலிபன்- மீம்கள்.


November 1 





October 31




October 30




October 29




October 28




October 27




October 26




October 25




October 24




October 23



October 22





October 21




October 20





October 19




October 18




October 17





October 16





October 15





October 14




October 13




October 12




October 11





October 10




October 9 



October 8





October 7




October 6





October 5




October 4





October 3





October 2




October 1 





September 30





September 29





September 28




September 27






September 26




September 25





September 24





September 23





September 22






September 21





September 20







September 19






September 18




September 17





September 16






September 15





September 14





September 13





September 12





September 11






September 10 - 






September 9 - chapter 22






September 8- chapter 21



September 7 - chapter 20 




September 6 - chapter 19





September 5 - chapter 18


September 4- Chapter 17 



September 3- chapter 16









September 2- chapter  15


September 1 -chapter 14



Chapter 13



Chapter 12





Chapter 11





Chapter 10







Chapter 8


Chapter 7 


Chapter 6



Chapter 5



Initial chapters 








இந்த வலைப்பதிவில் தேடு

Categories

Random Posts

3/random/post-list
Blogger இயக்குவது.

Pages

search