ஹாரன்!!

 பல வருடங்களுக்குப் பிறகு சென்னைக்குச் செல்ல நேர்ந்தது.  ரோட்டில் கால் வைத்ததும், ஹாரன் சப்தங்கள் தூள் கிளப்பின! 


சென்னையின் வாகனங்கள், ஹாரன் மூலம் மட்டுமே பேசிக் கொள்கின்றன . அதற்கென ஒரு பிரத்தியேக மொழி இருக்கிறது. ஒரு முறை ஹாரன் அடித்தால் நான் சந்திலிருந்து வருகிறேன் என்கிறது ! இரண்டு முறைக்கு - எனக்கு அவசரம், வழி விடு! குறுக்கே வரும் மாடுகளுக்கு ஒரு ஹாரன்,  சடாரென்று திரும்பும் ஆட்டோவிற்கு ஒன்று எனப் பல ரகங்கள்! 


ஒரு ஸ்கூட்டரால், ஹாரன் அடித்து , காரை வழிவிடச் செய்ய முடிகிறது . இது வண்டிகளுக்கான சமூக நீதி தானே! மனிதனின் ஆற்றாமைகள், கோவம் என எல்லாவற்றிற்கும் ஒரு வடிகாலாக இந்த ஹாரன் இருக்கிறது.  


டிராபிக் ஜாமில் , அடுத்து வரும் வண்டி, நானும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன் என்பதை, ஹாரன் அடிக்காமல் எப்படிச் சொல்ல முடியும்? 


ஒழுங்கற்ற ஒழுங்கில், இந்நகரம் இயங்க,  ஹாரனும் ஒரு காரணம். ஹாரன் அடிப்போம் மனிதன் காப்போம்! 




Views So far!